(வி-ம்.)பூவிரி - அழகுமிக்க; மலர்கள் செறிந்த. மதுகரம் நுகர- தேனைக் கையால் நுகர; வண்டு உண்ண. கயல் - மீன் போன்ற கண்; மீன் கரை - அகன்ற கண்ணின் இரு கடை, காவிரியின் கரை. காவிரி- காவிரியாறு. கனகம்-பொன். பெண்களுக்கும் காவிரிக்குஞ் சிலேடை. (39) கூந்தலியல்பு கூறி விளித்தது 60. | களப வண்டலிடு கலச கொங்கைகளின் | | மதிஎ ழுந்துகனல் சொரியுமென்று அளக பந்திமிசை அளிகள் பந்தரிடும் அரிவை மீர்கடைகள் திறமினோ . | (பொ-நி.) கொங்கைகளின் மதி கனல் சொரியுமென்று; அளிகள் அளகபந்திமிசை பந்தரிடும் அரிவைமீர் திறமின்; (எ-று.) (வி-ம்.)களபம் - கலவைச் சாந்து. கலசம்-கும்பம். வண்டல் - சேறு. மதி - நிலா. கனல் சொரியும் - (பிரிந்தார்க்குத்)துன்பம் செய்யும். அளகம்- கூந்தல். பந்தி - கட்டு. அளிகள் - வண்டுகள். பந்தர் - பந்தல்; பந்தலிட்டாற்போல் கூட்டமாக வட்டமிட்டுப் பறந்துநிற்றல். அரிவை-பெண், பிரிந்தார்க்கு மதிகனலைச் சொரியுமென்று வண்டுகள் பந்தரிட்டன என்றார். (40) புணர்ச்சிநிலை கூறி விளித்தது 61. | வாயின் சிவப்பை விழிவாங்க | | மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத் தோயக் கலவி அமுதளிப்பீர் துங்கக் கபாடம் திறமினோ. | (பொ-நி.) விழி சிவப்பை வாங்க, வாய் வெளுப்பை வாங்க, கலவி யமுது அளிப்பீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) வாங்க-தான் பற்றிக்கொள்ள. தோயம்-கடல். கலவி-புணர்ச்சி. துங்கம் - மேன்மை. விழி சிவக்க, உதடு வெளுக்கக் கலவி புரிந்தமை குறிக்கப்பட்டது. கலவியின் வாய் வெளுத்தலும், கண் சிவத்தலும் இயற்கையாதலான், இவ்வாறு ழுவாயின்......விழிவாங்க...வாய்வாங்கழு என நயம் படக் கூறினார். தோய - தழுவ எனக் கொண்டு பொருளுரைப்பினும் பொருந்தும். (41) |