இதுவும் அது 62. | கூடும் இளம்பிறையில் குறுவெயர் முத்துருளக் | | கொங்கை வடம்புரளச் செங்கழு நீரளகக் காடு குலைந்தலையக் கைவளை பூசலிடக் கலவி விடாமடவீர் கடைதிறமின் திறமின். | (பொ-நி.)வெயர்முத்து உருள, வடம் புரள, அளகக்காடு அலைய, வளை பூசலிட: கலவிவிடா மடவீர், திறமின் திறமின். (எ-று.) (வி-ம்.)பிறை - பிறைபோன்ற நெற்றி. வெயர்-வெயர்வை. வடம்- முத்துமாலை. அளகம்-கூந்தல். குலைந்து-அழிந்து. அலைய-புரள. பூசல்- ஒலி, கலவி-புணர்ச்சி, புணர்ச்சி நிலை கூறியதாம். (42) கலிங்கப் போர்ப்பாடல் கேட்குமாறு விளித்தது 63. | காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த | | கலவி மடவீர் கழற்சென்னி காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த களப்போர் பாடத் திறமினோ. | (பொ-நி.) காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த மடவீர் காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த போர் பாடத் திறமின்; (எ-று) (வி-ம்.)காஞ்சி - இடை அணி. கலிங்கம்-(உடுத்த) உடை. குலைந்த- நிலை பெயர்ந்து கிடந்த. கலவி-புணர்ச்சி. கலவிக்காலத்து இடையணியும் ஆடையும் உலைவது இயல்பாதலால் இவ்வாறு நயந்தோன்றக் கூறினார். சென்னி-குலோத்துங்க சோழன். காஞ்சி-காஞ்சிபுரம். இருக்க-தங்கி இருக்க. கலிங்கம் - கலிங்க நாடு. குலைந்த - அழிந்த. போர் பாட-போரையான் பாட.காஞ்சியும் கலிங்கமும் இரு பொருளில் வந்தன காண்க. (43) இதுவும் அது 64. | இலங்கை எறிந்த கருணா கரன்தன் | | இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர் கலிங்கம் எறிந்த கருணா கரன்தன் களப்போர் பாடத் திறமினோ. |
|