பக்கம் எண் :

கடை திறப்பு27


     (பொ-நி.)இலங்கை  எறிந்த   கருணாகரன்  தன்  சிலையின்  வலி
கேட்பீர்,  கலிங்கம் எறிந்த கருணாகரன் தன் போர் பாடத்திறமின்; (எ-று.)

     (வி-ம்.)கருணாகரன்-கருணைக்கடலாகிய இராமன். இகல்-வலி. சிலை-
வில். கேட்பீர் - கேட்க  விரும்பும்  பெண்களே. கருணாகரன்-கருணாகரத
தொண்டைமான்.  அருளுக்கு  இருப்பிடம்  போன்றவன் என்பது பொருள்
(குலோத்துங்கன் படைத்  தலைவன்.)  களப்போர் - கலிங்கக்  களப்போர்.
கருணாகரன்: இப் பொருளில் வந்த நயம் உணரத் தக்கது.          (44)

காதல் இயல்பு கூறி விளித்தது

65. பேணுங் கொழுநர் பிழைகளெலாம்
     பிரிந்த பொழுது நினைந்துஅவரைக் 
காணும் பொழுது மறந்திருப்பீர்
   கனப்பொற் கபாடந் திறமினோ.

     (பொ-நி.)  கொழுநர்  பிழைகளெலாம்  பிரிந்தபொழுது  நினைந்து, காணும்பொழுது மறந்திருப்பீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.)பேணும்  -  அன்புசெய்யும். கொழுநர் - கணவர்.  பிரிவுத்
துன்பத்தால்  பிழை  நினைதலும்  கண்ட  உவகையில்  அது  மறத்தலும்
இயல்பாம்   என்க.  கனம்   -   மேன்மை,   உயர்வு.  பொன் - அழகு;
பொன்னாலியன்ற.  இதனைக் 'காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்,
காணேன்  தவறல்  லவை'  எனத்  திருவள்ளுவர்  தந்த  காதலி கூற்றும்
ஒப்புநோக்கத் தக்கது.                          (45)

கணவரோடு பயிலுமியல்பு கூறி விளித்தது

66. வாச மார்முலைகள் மார்பி லாடமது
     மாலை தாழ்குழலின் வண்டெழுந்து 
ஊச லாடவிழி பூச லாடஉற
   வாடு வீர்கடைகள் திறமினோ.

     (பொ-நி.) முலைகள் மார்பில் ஆட, குழலின் வண்டு ஊசலாட, விழி பூசலாட, உறவாடுவீர் திறமின்; (எ-று.)