(வி-ம்.)வாசம்-மணம். மது-தேன். குழல்-கூந்தல் ஊசலாட- வந்தும் சென்றும் சுழல. விழி-கண். பூசலாட-இரு கடைகளோடு சென்று பொர. உறவாடுதல்-அன்பு பாராட்டுதல். (46)கலவி மயக்க நிலை கூறி விளித்தது 67. | நேயக் கலவி மயக்கத்தே | | நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப வாயைப் புதைக்கும் மடநல்லீர் மணிப்பொற் கபாடம் திறமினோ. | (பொ-நி.)மொழியைக் கிளி உரைப்ப, வாயைப் புதைக்கும் நல்லீர் திறமின்: (எ-று.) (வி-ம்.)நேயம் - அன்பு. கலவி -புணர்ச்சி. மொழி சொல். விடத்து பேசிய மொழியைப் பலர்முன் சொன்ன தென்கவாயைப் புதைக்கும் - கிளியின் வாயைப் புதைக்கும் (வியப்பும் அச்சமும் காரணமாகத் தன் வாயைப் புதைத்தாள் எனலுமாம்.)கலவியல் மொழிகளைக் கேட்டிருந்த கிளி பலர் முன் உரைத்ததென்க. இதனை ............கள்ளுலா நறிய கூந்தல் கலவியின் உரைத்த யாவும், கிள்ளைகள் மிழற்றுமாறு கேட்டிள நிலவுகாலும், முள்ளெயி றிலங்கச் செவ்வி முகிழ்நகை கோட்டினாளே' (மணம்புரி:54) என, நைடதத்தும் வருவது ஒப்புநோக்கி மகிழற்பாலது. மொழிகள் கலவிமயக்கத்தே முறைபிறழப்பேசிய சொற்களாகலின் அவற்றை எல்லோருங் கேட்டல் முறையன்றாகலின் வாயைப் புதைக்கலானாள். (47)பிரிவாற்றா நிலைகூறி விளித்தது 68. | பொங்கு மதிக்கே தினம்நடுங்கிப் | | புகுந்த அறையை நிலஅறைஎன்று அங்கும் இருக்கப் பயப்படுவீர் அம்பொற் கபாடம் திறமினோ. | (பொ-நி.)மதிக்கு நடுங்கி, அறையை, நிலவறை என்று, அங்கும் இருக்கப் பயப்படுவீர்; திறமின் (எ-று.) (வி-ம்.) பொங்குதல் - நிலவு காலுதல். மதி - நிலா. அறை- படுக்கையறை. நிலவறை-நிலத்துள் அமைக்கப்பட்ட வெளிச்சமற்ற அறை. பிரிவுத் துன்பத்தால் உடல் வெம்பிப் புழுங்கலின், இங்ஙனம் கூறப்பட்டது. (48) |