கொழுநர் வரவுபார்த்திருந்த நிலைகூறி விளித்தது 69. | வருவார் கொழுநர் எனத்திறந்தும் | | வாரார் கொழுநர் எனவடைத்தும் திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திறமினோ. |
(பொ-நி.)திறந்தும் அடைத்தும் குடுமி விடியளவும் தேயும்கபாடம் திறமின்; (எ-று.) (வி-ம்.) கொழுநர் - கணவர். திருகும் - சுழலும். குடுமி - வாயிலின் மேற்புறத்தமைந்த குழிவிடத்தோடு பொருத்தப் பெறும் கதவின் தலைப்பகுதி. விடி அளவும் - இரவுப்பொழுது நீங்கும் வரையும். தேயும்- தேய்ந்துபோகும். இதனை 'தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத், தேயத ்திரிந்த குடுமியவே' என வரும் முத்தொள்ளாயிரச்செய்யுளோடு (117) ஒப்பவைத்துக் கண்டு மகிழ்க. (49) கூடியும் ஊடியும் நின்றநிலை கூறி விளித்தது 70. | ஊடு வீர்கொழுநர் தங்கள் பான்முனிவொ | | ழிந்து கூடுதலின் உங்களைத் தேடுவீர் கடைகள் திறமி னோஇனிய தெரிவை மீர்கடைகள் திறமினோ. | (பொ-நி.)ஊடுவீர்; முனிவு ஒழிந்து கூடுதலின், உங்களைத் தேடுவீர், திறமினோ; தெரிவை மீர்திறமினோ; (எ-று.) (வி-ம்.)கொழுநர் - கணவர். முனிவு - ஊடல்; கூடுதல் - புணர்தல். உங்களைத்தேடுவீர் - உங்களை மறந்திருப்பீர் என்றபடி. அஃதாவது காதல் மயக்கத்தால் தம்மைத்தாமே மறந்து காதல் வயப்பட்டிருத்தல். இதனைத், ழுதன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற் றன்றேழு' என்னும் கம்பர மொழியானும் அறிக. தெரிவை-பெண். (50) கண்ணியல்பு கூறி விளித்தது 71. | பண்படு கிளவியை அமுதெனப் | | பரவிய கொழுநனை நெறிசெயக் கண்கொடு கொலைசெய அருளுவீர் கனகநெ டுங்கடை திறமினோ. |
|