(பொ-நி) அமுதெனப் பரவிய கொழுநனை நெறிசெயகொலை செய அருளுவீர் திறமினோ; (எ-று.)
(வி-ம்.)பண் - இசை. கிளவி - சொல். பரவிய-புகழ்ந்த. கொழுநன்- கணவன். நெறிசெய - (உங்கள்)வழிப்படுத்த. கொடு-கொண்டு. கொலைசெய அருளுவீர் - கொலைபுரிய விரும்புபவர்களே. தங்களைப் புகழ்ந்த கணவரைக் கண்பார்வையால் வாட்டினர் என்க. தம் கண்பார்வையா லவர்தம் கணவரை வயப்படுத்தி அவர் நெஞ்சம் நெக்குருகி நிற்கச் செய்தலை, ழுகொலை செய அருளுவீர்' என இறும்பூதுகொள்ள உரைத்தார். நெறிசெய்தலாவது தீய நெறியாகிய பரத்தை வழியிற் செல்லாது உம்மையே பற்றி நிற்கச் செய்தல். (51) பிரிவாற்றா வியல்பு கூறி விளித்தது 72. | பிழைநி னைந்துருகி அணைவு றாமகிழ்நர் | | பிரிதல் அஞ்சிவிடு கண்கணீர் மழைத தும்பவிரல் தரையி லேஎழுது மடந லீர்கடைகள் திறமினோ. | (பொ-நி)மகிழ்நர் பிரிதல் அஞ்சி, நினைந்து உருகி, விடுநீர் மழை ததும்ப, தரையிலே எழுது மடநலீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) பிழை - பிரிய நினைந்த பிழை. அணைவுறா -அணைய நினையாத. கண்கள் நீர்-கண்களினின்றும் பெருகும் நீர். நீர்மழை- நீராகிய மழை. விரல்-காற்பெருவிரல். பிரிவுத் துன்பத்தால் கண்ணீர் மழைபோன்று பெருக, காற் பெருவிரலால் நிலத்தைக் கீறி நின்றனர் என்க. மகளிர்க்குக் கணவர் பிரிவுத் துன்பத்தாலும் கூடல் இன்பத்தாலும் துன்பக் கண்ணீரும் இன்பக் கண்ணீரும் பெருகுவது இயற்கை. இங்கே பிரிவை யெண்ணித் துன்பக் கண்ணீர் வடித்தலைக் குறித்தார். இவ்வாறே கண்ணகியாரும், மாதவியாரும் முறையே பிரிவினானும், கூடலானும் தம் நிறையழிந்து கண்ணீர் உகுத்தனர் என இளங்கோவடிகள், ழுஉள்ளக நறுந்தா துறைப்பமீ தழிந்து, கள்ளுக நடுங்கும் கழுநீர்போலக், கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும், உண்ணிறை கரந்தகத் தொளித்துநீர் உகுத்தன, (சிலப், 5;235-8) கூறுவது கொண்டும் அறியலாம். (52) குலோத்துங்கனோடு ஒப்பித்து விளித்தது 73. | நக்காஞ் சிக்கும் வடம லைக்கும் | | நடுவில் வெளிக்கே வேடனைவிட்டு அக்கா னகத்தே உயிர்பறிப்பீர் அம்பொற் கபாடம் திறமினோ. | |