பக்கம் எண் :

32கலிங்கத்துப்பரணி

தோற்றுவாய்

75. களப்போர் விளைந்த கலிங்கத்துக்
     கலிங்கர் நிணக்கூழ் களப்பேயின்
உளப்போர் இரண்டு நிறைவித்தாள்
   உறையும் காடு பாடுவாம்.

    (பொ-நி.)  கலிங்கத்து,  நிணக்கூழ்  போர்  இரண்டு நிறைவித்தாள்
உறையும் காடு பாடுவோம்; (எ-று.)

    (வி-ம்.)  களம்  - போர்க்களம்.  நிணம் - கொழுப்பு.  உளப்போர்
இரண்டு-உள் அ போர் இரண்டு. உள் வயிற்றினுள். போர்-பொந்து (போர்-
போரை; பொந்து) நிறைவித்தாள்-நிறைவித்த காளி. உறையும்-இருக்கின்ற. (1)

காட்டின் இயல்பு கூறியது

76. பொரிந்த காரை கரிந்த சூரைபு
     கைந்த வீரையெ ரிந்த வேய்
உரிந்த பாரையெ றிந்த பாலையு
   லர்ந்த வோமைக லந்தவே.

    (பொ-நி)காரை, சூரை,  வீரை, வேய், பாரை, பாலை,  ஓமை கலந்த;
(எ-று.)
 
    (வி-ம்.)பொரிந்த-பொரிபொரியாய்ப் போன. உரிந்த- பட்டை உரிந்த.
எறிந்த - முறிந்த. கலந்த - கலந்தன. காரை சூரை வீரை முதலிய மரங்கள்
பொரிந்தும் கரிந்தும் புகைந்தும் எறிந்தும் போயினவெனின் அப்பாலையின்
வெம்மையைப் பற்றிக் கேட்கவேண்டாவென்க. (2)

இதுவும் அது 

77.உதிர்ந்த வெள்ளிலு  ணங்கு நெல்லியொ
     டுங்கு துள்ளியு லர்ந்தவேல்
பிதிர்ந்த முள்ளிசி தைந்த வள்ளிபி
   ளந்த கள்ளிப ரந்தவே.

     (பொ-நி.)   வெள்ளில்,  நெல்லி,  துள்ளி,  வேல்,  முள்ளி, வள்ளி,
கள்ளி பரந்த; (எ-று.)