(வி-ம்.) உதிர்ந்த - இலை உதிர்ந்த. வெள்ளில் - விளாமரம். உணங்குதல் - உலர்தல். ஒடுங்குதல் - வளராது குறுகுதல். துள்ளி -ஒரு வகை முட்செடி. வேல் - கருவேல், வெள்வேல் மரங்கள். பிதிர்தல் - பிளத்தல். முள்ளி - முள்ளிச்செடி. வள்ளி - வள்ளிக்கொடி. கள்ளி கொடிக்கள்ளி, திருகுகள்ளி முதலியன. பரந்த-பரவியிருந்தன. (3)இதுவும் அது 78. | வற்றல் வாகைவ றந்த கூகைம | | டிந்த தேறுபொ டிந்தவேல் முற்ற லீகைமு ளிந்த விண்டுமு ரிந்த புன்குநி ரைந்தவே. | (பொ-நி.) வாகை, கூகை, தேறு, வேல், ஈகை, தண்டு, புன்கு நிறைந்த; (எ-று.) (வி-ம்.)வறந்த - நீர்வற்றிய. கூகை - ஒருவகைக் கிழங்குக் கொடி. மடிந்த - அழிந்த. தேறு - தேற்றாமரம். முற்றுதல் - முதிர்தல். ஈகை- இண்டங்கொடி. முளிதல் - உலர்தல். விண்டு - மூங்கில். முரிதல்-ஒடிதல். புன்கு-புன்கமரம். நிரைந்த-வரிசையாக இருந்தன. (4)நிலஇயல்பு கூறியது 79. | தீய வக்கொடிய கான கத்தரைதி | | றந்த வாய்தொறும்நு ழைந்துதன் சாயை புக்கவழி யாதெ னப்பரிதி தன்க ரங்கொடுதி ளைக்குமே. | (பொ-நி)பரிதி, சாயை புக்கவழி யாதென, தரைதிறந்த வாய்தொறும் நுழைந்து திளைக்கும்; (எ-று.) (வி-ம்.) தரைதிறந்தவாய்-வெடிப்புகள். சாயை-ஞாயிற்றின் மனைவி. புக்கவழி-புகுந்த இடம். பரிதி-ஞாயிறு. கரம்-கை. ஒளிக்கதிர். திளைத்தல்- தொழிலில் இடைவிடாது பயிலல். ஒருகாலத்தில் சூரியன் மனைவியாகிய சாயை சூரியனை நீங்கிச் சென்றனள் எனவும் சூரியன் அவளைப் பலவிடங்களினுந் தேடித்திரிந்தனன் எனவும் கூறுவர். (5) |
|
|
|