நிழலின்மை கூறியது 80. | ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல் | | அஞ்சி அக்கடுவ னத்தைவிட்டு ஓடு கின்றநிழல் ஒக்கு நிற்குநிழல் ஓரி டத்தும்உள அல்லவே. | (பொ-நி) பருந்தின் நிழல் ஓடுகின்ற நிழல் ஒக்கும்; நிற்கும் நிழல் ஓரிடத்தும் உள அல்ல; (எ-று.)
(வி-ம்.) ஆடுகின்ற-பறத்தலால் அசைகின்ற. கடுவனம்-கொடிய காடு. சிறை - சிறகு. அப்பாலை நிலத்தில் பறக்கும் பருந்தினுடைய நிழல் அந்நிலத்தின் வெம்மைக்காற்றாது ஓடுவதை ஒத்திருந்த தென்க. (6) இதுவும் அது 81. | ஆத வம்பருகும் என்று நின்றநிழல் | | அங்கு நின்றுகுடி போனதப் பாத வம்புனல்பெ றாது ணங்குவன பருகும் நம்மையென வெருவியே. | (பொ-நி.) நின்ற நிழல், பாதவம் நம்மைப் பருகும் என வெருவி, அங்குநின்று குடிபோனது; (எ-று.)
(வி-ம்.) ஆதவம் - வெய்யில். நின்ற - மரத்தடியில் நின்ற. அங்கு- மரத்தடி. குடிபோனது - நீங்கிப்போயிற்று. பாதவம் - மரம். புனல் - நீர். உணங்குவன -உலர்வன. மரங்களும் தண்ணீரில்லாமையால் பட்டுப்போய் நிழலற்று நின்றன என்க. (7) புறாத் தென்படல் கூறியது 82. | செந்நெ ருப்பினைத் தகடு செய்துபார் | | செய்த தொக்குமச் செந்த ரைப்பரப்பு அந்நெ ருப்பினில் புகைதி ரண்டதொப்பு அல்லது ஒப்புறா அதனி டைப்புறா. | (பொ-நி.) தரைப்பரப்பு. நெருப்பினைத் தகடுசெய்துபார் செய்த தொக்கும்; அதனிடைப் புறா, புகை திரண்டது ஒப்பு அல்லது ஒப்பு உறா; (எ-று.)
(வி-ம்.) செம்தரை - செந்நிறமுள்ள பாலை நிலம். பரப்பு-விரிவான இடம். பார்-பூமி. ஒப்பு-ஒப்புதல். உறா-பொருந்தாது. திரண்ட புகையன்றி வேறு ஒப்பு இல்லை என்க. தரைப்பரப்பு நெருப்பினைப் போன்றும் அந்நிலத்தில் பறக்கும் புறாக்கள் புகைத்திரட்சியைப் போன்றும் விளங்கினவென்க. (8) |