பக்கம் எண் :

காடு பாடியது37


     (பொ-நி.)  நெடுமோடி  நிறுத்திய  பேய்  உயிர்ப்பனபோல்  மரம்
கரிந்துள; (எ-று.)

     (வி-ம்.) புடைபெயர்தல் - இடம்விட்டுப்  பெயர்தல். நெடு-உயர்ந்த.
மோடி - காளி.   புலம்பொடு - தனியே.   உயிர்த்தல் - மூச்சு  விடுதல்.
உயிர்ப்பனபோல் கரிந்து புகைந்து நிற்கின்றன என்க.              (14)

இதுவும் அது

89. வற்றியபேய் வாயுலர்ந்து
     வறள்நாக்கை நீட்டுவபோல்
முற்றிய நீள் மரப்பொதும்பின்
   முதுப்பாம்பு புறப்படுமே.

     (பொ-நி.) பேய்  நாக்கை  நீட்டுவதுபோல், பாம்பு, மரப்பொதும்பில் புறப்படும்; (எ-று.)

     (வி-ம்.) வற்றிய - மெலிந்த. உலர்தல் - ஈரம் புலர்தல். வறள்நாக்கு-
வறண்ட நாக்கு. முற்றிய-முதிர்ந்த. பொதும்பு-பொந்து. முதுபாம்பு - பெரிய பாம்புகள்.    மரப்பொந்திலுள்ள     பாம்புகள்      தலையைவெளியே
நீட்டிக்கொண்டு  புறப்படுதல் நீர் வேட்கையால் நாவறளப்பெற்ற  பேய்கள்
வெளியே நாக்கை நீட்டுதலைப்போல் காணப்படுகின்றன என்க.       (15)

சூறாவளியின் இயல்பு கூறியது

90. விழிசுழல வருபேய்த்தேர்
     மிதந்துவரு நீர்அந்நீர்ச்
சுழிசுழல வருவதெனச்
   சூறைவளி சுழன்றிடுமால்.
    
     (பொ-நி.)  பேய்த்தேர்  மிதந்துவரும்  நீர்  ஆகும் .  அந்நீர்  சுழல
வருவதென சூறைவளி சுழன்றிடும்; (எ-று.)

     (வி-ம்.) பேய்த்தேர்   -   கானல்.    மிதந்துவரும் - மேலோங்கி
வருகின்ற. சூறைவளி - சுழல்காற்று. கானலில் சுழி தோன்றுமாறு சுழற்காற்
றடிக்குமென்க.                                             (16)

மணிகள் கிடத்தல் கூறியது

91. சிதைந்தவுடற் சுடுசுடலைப் பொடியைச் சூறை
     சீத்தடிப்பச் சிதறியவப் பொடியால் செம்மை
புதைந்தமணி புகைபோர்த்த தழலே போலும்
   போலாவேற் பொடிமூடு தணலே போலும்.