காற்றின் இயல்பு கூறியது 94. | பல்கால்திண் திரைக்கரங்கள் கரையின் மேன்மேற் | | பாய்கடல்கள் நூக்குமது அப்படர்வெங் கானிற் செல்காற்று வாராமல் காக்க அன்றோ திசைக்கரியின் செவிக்காற்றும் அதற்கே யன்றோ. | (பொ-நி.) கடல், திரைக்கரங்களை நூக்கும் அது காற்றுவாராமல் காக்க அன்றோ? கரியின் செவிக்காற்றும் அதற்கே அன்றோ? (எ-று.) (வி-ம்.) பல்கால் - பலமுறை. திரைக்கரம்-அலையாகிய கை. நூக்குதல் -தள்ளுதல். திசை-திக்கு. கரி- யானை, செவிக்காற்று எழுப்பலும் அதற்கே என்க. அதற்கு - அதனை வாராமற் காக்க. (20) வெப்பநிலை கூறியது 95. | முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஓட | | மின்னொருநாள் வாளபயன் முனிந்த போரின் வெள்ளாறும் கோட்டாறும் புகையான் மூட வெந்தவனம் இந்தவனம் ஒக்கில் ஒக்கும். |
(பொ-நி.) தென்னர் ஓட, அபயன் முனிந்த போரில் புகையால் மூட வெந்தவனம், இந்தவனம் ஒக்கும்; (எ-று.) (வி-ம்.) முள் - முட்களையுடைய, ஆறு - வழி. கல்- பருக்கைக் கல். தென்னர்- பாண்டியர். முனிதல் - வெகுளல். வெள்ளாறு: ஆற்றின் பெயர். கோட்டாறு: ஊரின் பெயர். வனம் - பகை வேந்தரின் காவற்காடு. (21) மணல் இயல்பு கூறியது 96. | அணிகொண்ட குரங்கினங்கள | | அலைகடலுக்கு அப்பாலை மணலொன்று காணாமல் வரைஎடுத்து மயங்கினவே. | (பொ-நி.) குரங்கினங்கள், கடலுக்கு மணல் ஒன்றுகாணாமல், வரை எடுத்து மயங்கின; (எ-று.) |