பக்கம் எண் :

கோயில் பாடியது41


     (பொ-நி.)   கானகத்து   அணங்கினுக்குப்   பூதலம்  பழங்கோயில்; என்னினும்,  புதிய  கோயில்  உண்டு,  அது  விளம்புவாம்; (எ-று.)

     (வி-ம்.) ஓதிவந்த-சொல்லப்பட்ட. உறைதல்-தங்கியிருத்தல். அணங்கு
-காளி. அயன்-பிரமன். பூதலம்-உலகம்.                            (1)

கோயில் கடைகால் இயல்பு கூறியது

98. வட்ட வெண்குடைச் சென்னி மானதன்
     வாளின் வாயினால் மறலி வாயிடைப்
பட்ட மன்னர்தம் பட்ட மங்கையர்
   பரும ணிக்கருத் திருஇ ருத்தியே.

     (பொ-நி.)   மானதன்    வாளின்    வாயினால்   பட்டமன்னர்தம் மங்கைய(ருடைய)  மணி(யைக்)  கரு(வாக)  இருத்தி; (எ-று.)

     (வி-ம்.) சென்னி-சோழன். மானதன்-குலோத்துங்கன். மறலி- இயமன்.
பட்ட-வீழ்ந்த. பட்டமங்கையர்-பட்டத்துத் தேவியர். மணி-நகைகளிற் பதித்த இரத்தினம். திரு-அழகிய. கரு   இருத்தி- அடித்தளம் அமைத்து.திருக்கரு
இருத்தி என இயைக்க. புதுக்கட்டிடத்திற்குக் கடைகால்  இடுங்கால்  பொன்
மணிகளை இடல் மரபென்க.                                    (2)

சுவர் இயல்பு கூறியது

99.துவர்நி றக்களிற்று உதிய ரேவலின்
     சுரிகை போர்முகத்து உருவி நேரெதிர்த்து
அவர்நி ணத்தொடுஅக் குருதி நீர்குழைத்து
   அவர்க ருந்தலைச் சுவர டுக்கியே.

     (பொ-நி.) உதியர் ஏவலின், எதிர்த்தவர் நிணத்தொடு, அக் குருதிநீர்
குழைத்து, கருந்தலைச் சுவர் அடுக்கி; (எ-று.)

     (வி-ம்.) துவர்-சிவப்பு. உதியர்-சேரர். சுரிகை உருவி என  இயைக்க.
சுரிகை-உடைவாள். போர் முகம்-போர்க்களம். எதிர்த்தவர்-சேரநாட்டு வீரர்.
நிணம் -கொழுப்பாகிய சேறு. குருதி-செந்நீர்.  அவர் - அவ்வீரர்கள். கரும்
தலை-பெரிய தலை.                                           (3)