பக்கம் எண் :

கோயில் பாடியது43


மேற்கூரை இயல்பு கூறியது

103.துங்க பத்திரைச் செங் களத்திடைச்
     சோள சேகரன் வாளெ றிந்தபோர்
வெங்க தக்களிற் றின்ப டத்தினால்
   வெளிஅ டங்கவே மிசைக விக்கவே

     (பொ-நி.) சோளசேகரன்,    செங்களத்திடை,    எறிந்த  களிற்றின் படத்தினால் மிசை கவிக்க; (எ-று.)

     (வி-ம்.)  செங்களம்-போர்க்களம்,  சோளன்-சோழன்-குலோத்துங்கன்.
கதம்-சினம். வெளி அடங்க-வெற்றிடமில்லாது மறையும்படி.  படம்-முகபடாம்.
மிசை-கூரை.                                                  (7)

கோபுர மதில் இயல்பு கூறியது

104. கொள்ளிவாய்ப் பேய்காக்கும்
     கோபுரமும் நெடுமதிலும்
வெள்ளியால் சமைத்ததென
   வெள்ளெலும்பி னால்சமைத்தே

     (பொ-நி.)  கோபுரமும்   மதிலும்   எலும்பினாற்  சமைத்து;  (எ-று)

     (வி-ம்.) சமைத்தல் - ஆக்கல் .                            (8)

மகரதோரண இயல்பு கூறியது

105. காரிரும்பின் மகரதோ ரணமாகக் கரும்பேய்கள்
 ஓரிரண்டு கால்நாட்டி ஓரிரும்பை மிசைவளைத்தே.

     (பொ-நி.)  பேய்கள்,  தோரணமாக, இரண்டு கால், இரும்பை  மிசை வளைத்து; (எ-று.)

     (வி-ம்.) மகரம்-சுறாமீன். தோரணம்-குறுக்காகக் கட்டும்  கொடி. மிசை
-மேல்.                                                       (9)