பக்கம் எண் :

44கலிங்கத்துப்பரணி

அணி செயல் வகை கூறியது

106.மயிற்கழுத்தும் கழுத்தரிய மலர்ந்தமுகத்
     தாமரையும் மருங்கு சூழ்ந்த
எயிற்கழுத்தும் நிணக்கொடியும் இளங்குழவி
   பசுந்தலையும் எங்கும் தூக்கி.

     (பொ-நி.)  மயில்   கழுத்தும்,   முகத்தாமரையும்,  நிணக்கொடியும், பசுந்தலையும் எங்கும் தூக்கி; (எ-று.)

     (வி-ம்.) கழுத்தரிதல் தேவிக்குப் பலி இடற்கு. மருங்கு-பக்கம். எயில்
-மதில்.  அழுத்தல்-செருகுதல்.  நிணக்கொடி-கொழுப்பாலான  கொடிச்சீலை. பசுந்தலை-இளமையுள்ள  தலை.  குழவி-குழந்தை.                  (10)

இதுவும் அது

107.பணியாத வழுதியர்தம் பாய்களிற்றின்
     செவிச்சுளகு பலவும் தூக்கி
மணியூசல் எனமதுரை மகரதோ
   ரணம்பறித்து மறித்து நாட்டி.

     (பொ-நி.)  செவிச்சுளகு  பலவும்  தூக்கி, மணி    ஊசலென, மகர
தோரணம் நாட்டி; (எ-று.)

     (வி-ம்.) வழுதியர்-பாண்டியர். சுளகு-முறம்.தூக்குதல்-தொங்கவிடுதல்,
மறித்து-மீண்டும்.                                             (11)

இதுவும் அது

108.பரிவிருத்தி அலகிட்டுப் பசுங்குருதி
     நீர்தெளித்து நிணப்பூச் சிந்தி
எரிவிரித்த ஈமவிளக்கு எம்மருங்கும்
   ஏற்றியதோர் இயல்பிற் றாலோ.

     (பொ-நி.)  அலகிட்டு.  நீர்  தெளித்து, பூச்சிந்தி, விளக்கேற்றியதோர் இயல்பிற்று; (எ-று.)

     (வி-ம்.)  பரிவிருத்தி-பரிவு   இருத்தி-அன்பை  நிலையுறச்   செய்து. அக்கோவில்-சுற்றுப்புறம்.  குருதி-செந்நீர்.  நிணம்-கொழுப்பு.  எரி-தீ.  ஈமம்
-சுடலை.                                                    (12)