பலிஇட்ட தலை இயல்பு கூறியது 118. | அரிந்ததலை உடனமர்ந்தே ஆடுகழை | | அலைகுருதிப் புனலின் மூழ்கி இருந்தவுடல் கொளக்காலன் இடுகின்ற நெடுந்தூண்டில் என்னத் தோன்றும். |
(பொ-நி.)தலையுடன் ஆடு கழை காலன் இடுகின்ற தூண்டில் என்னத் தோன்றும்; (எ-று.) (வி-ம்.) அரிந்த-அறுத்த. அமர்ந்து-பொருந்தி. கழை-மூங்கில். காலன்- இயமன். குருதியாகிய தண்ணீரில் உடலாகிய மீனைப் பிடிக்க மூங்கிலாகிய தூண்டிலை இயமனாகிய தூண்டிற்காரன் இட்டதுபோன்று என்க. (22) கொள்ளிவாய்ப் பேய் இயல்பு கூறியது 119. | கொல்வாய் ஓரி முழவாகக் | | கொள்ளி வாய்ப்பேய் குழவிக்கு நல்வாய்ச் செய்ய தசைதேடி நரிவாய்த் தசையைப் பறிக்குமால். |
(பொ-நி.)குழவிக்கு ஓரி முழவாகப் பேய் குழவிக்குத் தசை தேடி, நரிவாய்த் தசையைப் பறிக்கும்; (எ-று.) (வி-ம்.)கொல்வாய்- உயிர்களைக் கொல்கின்ற வாய். ஓரி - கிழநரி. குழவி - குழந்தை. தசை-இறைச்சி. (23) காளி கோயிலின் சூழலிட இயல்பு கூறியது 120. | நிணமும் தசையும் பருந்திசிப்ப | | நெருப்பும் பருத்தி யும்போன்று பிணமும் பேயும் சுடுகாடும் பிணங்கு நரியும் உடைத்தரோ. |
(பொ-நி.)நெருப்பும் பருத்தியும் பிணமும் பேயும் சுடுகாடும் நரியும் உடைத்து; (எ-று.) (வி-ம்.)நிணம் - கொழுப்பு. தசை-சதை; இறைச்சி. இசிப்ப - இழுப்ப. பருத்தி-செம்பருத்தி. பொன்றுதல் - இறுத்தல். பிணங்குதல் - சண்டையிடல். உடைத்து-உடையது. (24) |