உடைச் சிறப்புக் கூறியது 125. | பரிவக லத்தழுவிப் புணர்கல விக்குருகிப் | | படர்சடை முக்கணுடைப் பரமர்கொ டுத்தகளிற்று உரிமிசை யக்கரியிற் குடரொடு கட்செவியிட்டு ஒருபுரி இட்டுஇறுகப் புனையுமு டுக்கையளே. |
(பொ-நி.) பரமர் கலவிக்கு உருகிக்கொடுத்த களிற்று உரிமிசை, ஒருபுரி இட்டு இறுகப் புனையும் உடுக்கையள்; (எ-று.) (வி-ம்.) பரிவு - காமத்துன்பம். கலவி - ஒன்றுபட்ட இன்பம். படர் -விரித்த. பரமர் - சிவனார். உரி - தோல். கரி - யானை. குடர் - குடல்; ஈற்றுப்போலி, கட்செவி-பாம்பு. புரி-முறுக்கிய கயிறு. உடுக்கை - அரைக்கச்சு. (5) வயிற்றின் சிறப்புக் கூறியது 126. | கலைவளர் உத்தமனைக் கருமுகில் ஒப்பவனைக் | | கரடத டக்கடவுட் கனகநி றத்தவனைச் சிலைவளை வுற்றவுணத் தொகைசெக விட்டபரித் திறலவ னைத்தரும்அத் திருஉத ரத்தினளே. | (பொ-நி.)் உத்தமனை, முகில் ஒப்பவனை, கனகநிறத்தவனை, திறலவனை, தரும்அத்திரு உதரத்தினள்; (எ-று.) (வி-ம.்) உத்தமன் - பிரமன். முகில் ஒப்பவன் - திருமால். கரடம் -மதம் பாய் சுவடு. கனகம்-பொன். கனக நிறத்தவன்-யானைமுகன். அவுணர ்-அசுரர். செக-அழிய. பரி-மிக்க. திறலவன்-முருகன். தரும்-பெற்ற. திரு -அழகு. உதரம்-வயிறு. (6) மேலாடைச் சிறப்புக் கூறியது 127. | கவளம தக்கரடக் கரியுரி வைக்கயிலைக் | | களிறுவி ருப்புறும்அக் கனகமு லைத்தரளத் தவளவ டத்திடையிற் பவளமொ டொத்தெரியத் தழலுமிழ் உத்தரியத் தனிஉர கத்தினளே. |
(பொ-நி.) கயிலைக்களிறு விருப்புறும் முலைத் தரளவடத்திடையில் பவளமொடு ஒத்து எரிய தழல் உமிழ் உரகத்தினள். (எ-று.) |