பக்கம் எண் :

54கலிங்கத்துப்பரணி

    (பொ-நி.)அவள், குலகிரிகள்(ஐ)காதிற்கொண்டணியின் குதம்பையாம்; கோத்தணியின் மணிவடமாம்; (எ-று.)

    
(வி-ம்.)அண்டம் - உலகம். கிரி - மலை.  ஒருகால் - ஒரு  சமயம்.
குதம்பை-காதோலை. வடம்-மாலை.                             (12)

இதுவும் அது

133. கைம்மலர்மேல் அம்மனையாம்
     கந்துகமாம் கழங்குமாம்
அம்மலைகள் அவள்வேண்டின்
   ஆகாத தொன்றுண்டோ.

    (பொ-நி.)  அம்மலைகள்,  அம்மனையாம், கந்துகமாம், கழங்குமாம்;
வேண்டின்  ஆகாதது  ஒன்று  உண்டோ; (எ-று.)

    
(வி-ம்.)அம்மனை-அம்மனை விளையாட்டுக்கருவி.  கந்துகம்-பந்து.
கழங்கு-கழற்சிக்காய்.                                        (13)

*ஓங்காரத் துட்பொருளாய்
   ஒருவாது நடந்தாளை
நீங்காமல் நின்றாளை
   எவ்வண்ணம் நிகழ்த்துவாம்.

______

6. பேய்களைப் பாடியது

     [அத்தேவியைச்   சூழ்ந்திருக்கும்  பேய்களின்   இயல்பு    ஈண்டுக்
கூறப்படுகிறது.]
 
    பேய்களின்  கை, கால், வாய், வயிறு,   முழந்தாள், உடம்பு, கன்னம்,
கண்,  முதுகு,  உந்தி,  உடல்மயிர்,  மூக்கு,  செவி,  பல்,  தாலி,   உதடு
என்பவற்றின் இயல்பு வியப்புறுமாறு கூறப்படுகின்றன.

     பின் கான்முடப்பேய், கைம்முடப்பேய்  குருட்டுப்பேய், ஊமைப்பேய், செவிட்டுப்பேய்,    குறட்பேய்,   கூன்முதுகுப்பேய்   ஆகிய   காளியைச்
சூழ்ந்திருந்த   பேய்களின்   இயல்பு   கூறப்படுகிறது.   இத்தொடர்பாகக்
குலோத்துங்கன்    வெற்றிச்சிறப்புப்    பல   குறிக்கப்படுவது   பெரிதும் போற்றத்தக்கது.]


* இப்பாட்டுச் சில ஏடுகளிற் காணப்படுகின்றது.