உடம்பின் இயல்பு கூறியது 137. | வெற்றெ லூம்பைந ரம்பின்வ லித்துமேல் | | வெந்தி லாவிற கேய்ந்தவு டம்பின கொற்ற லம்பெறு கூழிலம் எங்களைக் கொள்வ தேபணி யென்றுகு ரைப்பன | (பொ-நி.) விறகு ஏய்ந்த உடம்பின. கூழ் இலம்; பணி கொள்வதே என்று குரைப்பன; (எ-று.)
(வி-ம்.) வலித்தல் - கட்டல். மேல் வெந்து இலா-மேற்புறம் வேகாத. ஏய்ந்த-ஒத்த. உள்வயிறு வெந்தும் மேல் தெரியும் விறகுபோன்ற எலும்பு வேவவில்லை யென்க. கொல்தலம் - கொல்லும் இடமாகிய போர்க்களம். கூழ் - நிணக்கூழ். கொள்வதே - கொள்ளலாமோ. பணி - குற்றேவல். குரைப்பன-ஓல மிடுவன. (4) கன்னம், விழி, இயல்பு கூறியது 138. | உள்ளொ டுங்கியி ரண்டுமொன் றாகவே | | ஒட்டி ஒட்டிவி டாதகொ டிற்றின கொள்ளி கொண்டிரண் டேமுழை யுட்புகின் குன்று தோன்றுவ போலவி ழிப்பன. | (பொ-நி.) ஒட்டுவிடாத கொடிற்றின; குன்றுதோன்றுவ போல விழிப்பன; (எ-று.)
(வி-ம்.) இரண்டும்-இரண்டு கன்னமும். கொடிறு-கன்னம். கொள்ளி- கொள்ளிக்கட்டை. ஏம், ஏமம்-பாதுகாப்பான. முழை-குகை. புகின் -ஒருவன் புகுந்தால் (அப்பொழுது). குன்று-மலை. (5) முதுகு, உந்தி இயல்பு கூறியது 139. | வற்ற லாகஉ லர்ந்தமு துகுகள் | | மரக்க லத்தின்ம றிபுற மொப்பன ஒற்றை வான்தொளைப் புற்றெனப் பாம்புடன் உடும்பு முட்புக்கு றங்கிடும் உந்திய . | (பொ-நி.) முதுகுகள் மரக்கலத்தின் மறிபுறம் ஒப்பன. பாம்புடன் உடும்பும் உறங்கிடும் உந்திய; (எ-று.) |