பக்கம் எண் :

பேய்களைப் பாடியது57


     (வி-ம்.)வற்றல்  ஆக-வற்றலைப்போல. மரக்கலம்-படகு;  மறிபுறம்-
காற்றால் மறிந்த புறப்பக்கம்.  வான்தொளை - பெரியதுளை.  புற்று-வளை.
புக்கு-புகுந்து, உந்திய-கொப்பூழையுடையன.                        (6)

உடல், மயிர், மூக்கு, செவி இயல்பு கூறியது

140. பாந்தள் நால்வன போலுமு டல்மயிர்
     பாசி பட்டப ழந்தொளை மூக்கின 
ஆந்தை பாந்தியி ருப்பத்து ரிஞ்சில்புக்கு
   அங்கு மிங்குமு லாவுசெ வியன.

     (பொ-நி.) பாந்தள் போலும் மயிர்; பழந்தொளை மூக்கின; துரிஞ்சில்
உலாவு செவியன; (எ-று.)

     (வி-ம்.)பாந்தள் -பாம்பு. நாறுதல்-தொங்குதல். பழம்பாசி-நாட்பட்ட
அழுக்கு. பட்ட-பொருத்திய.  பாந்தியிருத்தல்-பதுங்கியிருத்தல். துரிஞ்சில்-
வௌவால் இனத்தைச் சேர்ந்தது, உலாவு-உலாவித் திரிகின்ற. (7)

பல், தாலி, தலை உதடு இயல்பு கூறியது

141. கொட்டு மேழியுங் கோத்தன பல்லின
     கோம்பி பாம்பிடைக் கோத்தணி தாலிய
தட்டி வானைத்த கர்க்குந் தலையின
   தாழ்ந்து மார்பிடைத் தட்டும்உ தட்டின.

     (பொ-நி.) கோத்தன்ன  பல்லின;  கோத்து  அணிதாலிய; தகர்க்கும் தலையின; தட்டும் உதட்டின; (எ-று.)

     (வி-ம்.)கொட்டு-மண்வெட்டி.  மேழி - கலப்பையின் மேழி. கோத்த
அன்ன  - கோவைப்படுத்தியது  போன்ற.  கோம்பி - ஓந்தி.  பாம்பிடை-
பாம்பின்கண். தட்டி-மோதி. வான்-விண். தகர்க்கும்-உடைக்கும்.       (8)

பேய்க்குழவிகளின் இயல்பு கூறியது

142.அட்ட மிட்டநெ டுங்கழை காணில்என்
     அன்னை யன்னையென் றாலுங்கு ழவிய
ஒட்ட வொட்டகங் காணில்என் பிள்ளையை்
   ஒக்கு மொக்குமென் றொக்கலை கொள்வன.

     (பொ-நி.)   குழவி,  கழை  காணில்  அன்னை என்று ஆலும் பேய்
ஒட்டகம் காணில் ஒக்கலை கொள்வன; (எ-று.)