பக்கம் எண் :

58கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) அட்டம்-அண்மை; பக்கம். கழை-மூங்கில். ஆலும்-ஒலியிடும்.
குழவி - பேயின் குழந்தைகள்.  ஒட்ட - அண்மையில். பிள்ளை -குழந்தை.
ஒக்கலை-இடுப்பு.                                            (9)

பேயின் பசி இயல்பு கூறியது

143. புயல ளிப்பன மேலும ளித்திடும்
     பொற்க ரத்தப யன்புலி பின்செலக் 
கயலொ ளித்தக டுஞ்சுரம் போல்அகங்
   காந்து வெம்பசி யிற்புறந் தீந்தவும்.

     (பொ-நி.) அபயன்  புலி  பின்  செல,  கயல் ஒளித்த சுரம் போல்
காந்து வெம்பசியில் புறம் தீந்த; (எ-று.)

     (வி-ம்.)புயல் - மேகம். அளிப்பன மேல்-அளிப்பனவற்றிற்கு மேல்.
பொன் அளித்திடும் - பொன்னைக்  கொடுக்கின்ற.  கரம் - கை. அபயன்-குலோத்துங்கன். புலி - புலிக்கொடி. பின்செல - துரத்திக் கொண்டு போக.
கயல் - கயற்கொடி.  சுரம்-பாலைநிலம். புறம்-வெளிப்பக்கம். தீதல் -கரிதல்.
(10)

காளியைச் சூழ்ந்த பேய் இருப்புக் கூறியது

144. துஞ்ச லுக்கணித் தாமென முன்னமே்
     சொன்ன சொன்னது றைதொறும் பேயெலாம்
அஞ்ச லித்தொரு கால்அக லாமலவ்
   வணங்கி னுக்கரு காகவி ருக்கவே.

    (பொ-நி.)  பேய்  எலாம், சொன்ன  துறைதொறும், அணங்கினுக்கு
அருகாக, அஞ்சலித்து, இருக்க; (எ-று.)

     (வி-ம்.)துஞ்சல்-(பசியால்)இறத்தல்,  அணித்து-நெருங்கியது. துறை-
இடம்.  அஞ்சலித்து -  வணங்கி.  ஒருகால் - ஒருகாலமும்.  அகலாமல்-
விட்டுச்செல்லாமல். அணங்கு-காளி.                            (11)

கால்முடப் பேயைக் கூறியது

145.ஆளைச் சீறுக ளிற்றப யன்பொரூஉம்
     அக்க ளத்தில்அ ரசர்சி ரஞ்சொரி
மூளைச் சேற்றில்வ ழுக்கிவி ழுந்திட
   மொழிபெ யர்ந்தொரு கான்முட மானவும்.