(பொ-நி.)அபயன் பொரூஉம் களத்தில் அரசர் சிரம் சொரி மூளைச் சேற்றில் வழுக்கி விழுந்திட கால்முடமானவும்; (எ-று.)
(வி-ம்.) ஆள்-ஆண்மை வீரர்கள். சீறு-சினந்து கொள்கின்ற களிறு- யானை. அபயன் - குலோத்துங்கன். பொரூஉம் - போர்செய்கின்ற. களம்- போர்க்களம் சொரி-சிந்துகின்ற. சிரம்-தலை. மொழி-கால் மூட்டு. (12)கைம்முடப் பேயைக் கூறியது 146. | அந்த நாளக்க ளத்தடு கூழினுக்கு | | ஆய்ந்த வெண்பல்ல ரிசியுரற்புக உந்து போதினிற் போதகக் கொம்பெனும் உலக்கை பட்டுவ லக்கைசொற் றானவும். | (பொ-நி.) வெண்பல் அரிசி, உரல்புக, உந்து போதினில் போதகக் கொம்பெனும் உலக்கைபட்டு வலக்கை சொற்று ஆனவும்; (எ-று.)
(வி-ம்.) அந்தநாள்-குலோத்துங்கன் போர் புரிந்த நாள். அக்களம்- போர்க்களம். அடுதல் - சமைத்தல.் கூழ் - நிணக்கூழ். ஆய்ந்த- ஆராய்ந்தெடுத்த. வெண்பல் அரிசி-வெள்ளைநிறமுள்ள பற்களாகிய அரிசி. உந்துதல் - குற்றுதல். போதகக் கொம்பு-யானைத்தந்தம். சொற்று-சொற்றை. ஊனம்-முடம். (13) குருட்டுப் பேயைக் கூறியது 147. | விருத ராசப யங்கரன் முன்னொர்நாள் | | வென்ற சக்கரக் கோட்டத்தி டைக்கொழுங் குருதி யுங்குட ருங்கலந்து அட்டவெங் கூழ்தெ றித்தொரு கண்குரு டானவும். | (பொ-நி.) சக்கரக்கோட்டத்திடை, கூழ் தெறித்து ஒரு கண்குருடானவும்; (எ-று.)
(வி-ம்.) விருதராச பயங்கரன் - குலோத்துங்கன்; வெற்றிச் சின்னங்களையுடைய அரசர்களுக்கு அச்சமுண்டாக்குவோன். சக்கரக்கோட்டம்-சக்கரக்கோட்டம் என்னும் ஊர். குருதி-செந்நீர். அட்ட-சமைத்த. வெம்கூழ்-சுடுகூழ். தெறித்தல்-படுதல். (14) |