பக்கம் எண் :

60கலிங்கத்துப்பரணி

ஊமைப்பேயைக் கூறியது

148.வண்டல் பாய்பொன்னி நாடனை வாழ்த்திமா
     மதுரை வெங்களத் தேமது ரிக்கஅட்
டுண்ட கூழொடு நாவுஞ்சு ருண்டுபுக்கு
   உள்வி ழுந்தற ஊமைக ளானவும்

     (பொ-நி.)   மதுரைக்களத்தே,   பொன்னிநாடனை  வாழ்த்திஅட்ட
கூழொடு, நாவும் சுருண்டு ஊமைகளானவும்; (எ-று.)

     (வி-ம்.)வண்டல் - இளஞ்சேறு. பொன்னி-காவிரி. மதுரிக்க-இனிக்க.
அட்டு  - சமைத்து.   நாச்சுருண்டது  - கொதிக்கும்  கூழை  ஆசையால
உட்கொண்டமையின். உள்புக்கு-உள்ளே சென்று.                  (15)

செவிட்டுப் பேயைக் கூறியது

149.ஆனை சாயவ டுபரி ஒன்றுகைத்து
     ஐம்ப டைப்பரு வத்துஅப யன்பொருஞ் 
சேனை வீரர்நின் றார்த்திடும் ஆர்ப்பினில்
   திமிரி வெங்களத் திற்செவி டானவும்.

     (பொ-நி.)  அபயன்,  பரி  உகைத்து பொரும் திமிரி வெங்களத்தில
்வீரர் ஆர்த்திடும் ஆர்ப்பினில் செவிடானவும்; (எ-று.)

     (வி-ம்.)ஆனை-யானை, அடு-கொல்லுகின்ற, பரி-குதிரை, உகைத்து-செலுத்தி;   ஓட்டி.   ஐம்படைப்பருவம்  -   ஐம்படைத்தாலி   அணியும்
இளமைப்பருவம்,  ஐம்படை:  வில்,  வாள், தண்டு, வளை, ஆழி என்பன.
இவைகளின்   உருவைப்   பொன்னாற்   செய்து   இளஞ்சிறார்களுக்குக்
கழுத்திலணிவது  பண்டையோர் மரபு. அபயன்-குலோத்துங்கன். ஆர்ப்பு-
பேரொலி.                                                 (16)

குறட் பேயைக் கூறியது

150.பண்டு தென்னவர் சாயஅ தற்குமுன்
     பணிசெய் பூதக ணங்கள னைத்தையுங்
கொண்டு வந்தபேய் கூடிய போதில்அக்
   குமரி மாதர்பெ றக்குற ளானவும்.