(வி-ம்.)அணை -தலையணை;பேய்முறித்து அணையை இட்டு என்க. நிணம்-கொழுப்பு. நிலா-ஒளி. பஞ்சசயனம்-ஐந்து மெத்தையை அடுக்கிய படுக்கை. ஐந்துவகை மெத்தையாவது: இலவம் பஞ்சு, செம்பஞ்சு, வெண்பஞ்சு, மலர், அன்னத்தின் இறகுஇவைகளைக்கொண்டு தனித்தனியே அமைக்கப்படுவது. (2) காளியின் இருப்பு 155. | கெடாதபடி கெடுஞ்செழியர் கெடும்பொழுதின் | | இடும்பிண்டி பாலம் ஏந்தி இடாகினிகள் இருமருங்கும் ஈச்சோப்பிப் பணிமாற இருந்த போழ்தின். | (பொ-நி.) பிண்டிபாலம் ஏந்தி, இடாகினிகள் ஈச்சோப்பிப் பணிமாற இருந்த போழ்தின்; (எ-று.) (வி-ம்.) கெடும் செழியர் - நன்மையற்ற பாண்டியர். கெடும் பொழுதின்-தோற்று ஓடுங்கால். கெடாதபடி-அங்ஙனம் ஓடாதவாறு. இடும்- குலோத்துங்கன் எறியும். பிண்டி - ஒருவகைப் படை. பாலம் - மழு; எறிபடைகள். இடாகினிகள் - பிணந்தின்னும் பெண்பேய். ஈச்சோப்பி- ஈயோட்டும் கருவிப் பொருள். பணிமாற -மாறிமாறி வீச. (3)நெடும்பேய் செய்தி கூறியது 156. | அடல்நாக வெலும்பெடுத்து நரம்பிற் கட்டி | | அடித்தடியும் பிடித்துஅமரின் மடிந்த வீரர் குடர்சூடி நிணச்சட்டை யிட்டு நின்ற கோயில்நா யகிநெடும்பேய் கும்பிட்டு ஆங்கே. | (பொ-நி.) தடிபிடித்துக், குடர்சூடி, நிணச்சட்டை இட்டு நின்ற நெடும்பேய் கும்பிட்டு; (எ-று.) (வி-ம்.) நாகம் - யானை. நரம்பு - யானையின் நரம்பு. அடித்தடி-தலையடிமைத் தொழிலுக்கடையாளமான தடி. அமர் - போர், சூடி- மாலையாகச் சூடி, நிணம்-கொழுப்பு. நாயகி-காளி. நெடும்பேய் -தலைமைப் பேய். (4) |