பக்கம் எண் :

64கலிங்கத்துப்பரணி

நெடும்பேய் காளிக்குக் கூறல்

157. சுரகுருவின் தூதாகி யமன்பாற் செல்வோன்
     துணித்துவைத்த சிரம்அன்று தின்றபேயைச்
சிரம்அரிய வதற்குறவாய் ஒளித்துப் போந்த்
   சிலபேயைத் திருவுள்ளத் தறிதி யன்றே.

     (பொ-நி.)   சிரம்  தின்ற  பேயை,  சிரம்அரிய,  அதற்கு  உறவாய்
ஒளித்துப் போந்த பேயை அறிதி அன்றே; (எ-று.)

     (வி-ம்.)  சுரகுரு -சோழன் ஒருவன். செல்வோன்-சென்ற பேய்மகன்.
துணித்தல் - வெட்டுதல்  (உண்ணுதற்குத் துணித்த தென்க.) சிரம் - தலை.
அன்று-அந்தநாள். தின்ற-களவாடித்தின்ற. அரிய-நீ அரிந்துவிட. உறவாய்-
தொடர்புற்று நண்புரிமை பூண்ட.                               (5)

ஒரு முதுபேயின் வருகை கூறியது

158.அப்பேயி னொருமுதுபேய் வந்து நின்றிங்கு
     அடியேனை விண்ணப்பஞ் செய்க என்றது 
இப்பேய்இங் கொருதீங்குஞ் செய்த தில்லை
   என்கொலோ திருவுள்ளம் என்னக் கேட்டே.

     (பொ-நி.) முதுபேய்  வந்துநின்று,  "விண்ணப்பம் செய்க"  என்றது.
"இப் பேய் தீங்கு செய்ததில்லை திருவுள்ளம் என்?" என்னக் கேட்டு;
(எ-று.)

     (வி-ம்.)முதுபேய் - கிழப்பேய். விண்ணப்பம் செய்தல்-தெரிவித்தல்.
தன்   வருகையைத்   தெரிவித்துத்   தன்பாற்   பிழை    இன்மையைத்
தெரிவிக்குமாறு முதுபேய் கூறிய தென்க. திருஉள்ளம்-சிறந்த கருத்து.  (6)

முதுபேய் காளி திருமுன் அணுகியது கூறியது

159.அழைக்க வென்றலும் அழைக்க வந்தணுகி
     அஞ்சி யஞ்சிஉன தாணையின் 
பிழைக்க வந்தனம்பொ றுத்தெ மக்கருள்செய்
   பெண்ண ணங்கெனவ ணங்கவே.