(பொ-நி) "அழைக்க" என்றலும், அழைக்க (முதுபேய்)வந்து அணுகி அஞ்சி "பிழைக்க வந்தனம்; அருள்செய்" என வணங்க; (எ-று.)
(வி-ம்.)என்றலும்-காளி என்றலும் அழைக்க -நெடும்பேய் அழைக்க. ஆணையில் அடங்கிப் பிழைக்க வந்தனம் என்க. அணங்கு-தெய்வம். (7) முதுபேய்க்குக் காளி மொழிந்தது கூறியது 160. | அருத்தி யிற்பிழைநி னைத்த கூளியை | | அறுத்த வன்தலைய வன்பெறப் பொருத்தி அப்பிழைபொ றுத்த னம்பிழை பொறாத தில்லையினி யென்னவே. | (பொ-நி.) "கூளியை அறுத்த தலையை அவன் பெறப்பொருத்தி, அப் பிழை பொறுத்தனம். இனிப் பொறாத பிழை இல்லை" என்ன; (எ-று.)
(வி-ம்.)அருத்தி -(தலையின் மேல் வைத்து) ஆசை, பிழை- குற்றம், களவாடல். கூளி - பேய். வன் - வலிய. தலை - போயினதுதலை. அவன்- தூதுசென்றவன். பொருத்தி-அமைத்து. (8) முதுபேய் மொழிந்தது கூறியது 161. | உய்ந்து போயினம்உ வந்தெ மக்கருள | | ஒன்றோ டொப்பனவொ ராயிரம் இந்திர சாலமுள கற்று வந்தனென் இருந்து காணெனஇ றைஞ்சியே. | (பொ-நி.) "நீ அருள, உய்ந்து போயினம்; ஆயிரம் இந்திர சாலம்உள; கற்றுவந்தனன் காண்" என இறைஞ்சி; (எ-று.)
(வி-ம்.)உய்தல் -பிழைத்தல். உவந்து-மகிழ்ந்து. ஒன்றோடொப்பன- ஒன்றேபோல. இந்திரசாலம்-மாயவித்தை. இதனை உலக வழக்கில் 'கண் கட்டி வித்தை' என வழங்குவர். இறைஞ்சி-வணங்கி. (9) |