பக்கம் எண் :

66கலிங்கத்துப்பரணி

துதிக்கை, யானைத் தலைகளான இந்திரசாலம் கூறியது

162.ஏற நின்னிருதி ருக்கண் வைத்தருள்செய்
     இக்கை யிற்சிலது திக்கைபார் 
மாறி யிக்கையில்அ மைக்க மற்றவை
   மதக்க ரித்தலைகள் ஆனபார்.

     (பொ-நி.)   "திருக்கண்வைத்து  அருள்செய்;  இக்கையில்  துதிக்கை
அழைக்க, இக்கையில் மதக்கரித் தலைகள் ஆன" பார்; (எ-று.)

     (வி-ம்.)ஏற - நேரே,  திரு இருகண் - அழகிய  இரண்டு கண்கள்.
துதிக்கை-தும்பிக்கை. அழைக்க-கூப்பிட்டவுடன். மதக்கரி-மதயானை.  (10)

யானைத் தலையுடன் குறையுடலும் காட்டிய
இந்திரசாலம் கூறியது

163.இக்க ரித்தலையிடன் வாயி னின்று உதிர
     நீர்குடித்து உருமி டித்தெனக் 
கொக்க ரித்து அலகை சுற்ற மற்றிவை
   குறைத்த லைப்பிணம்மி தப்பபார்.

     (பொ-நி.) "அலகை,  கரித்தலையின் வாயினின்று,  உதிரநீர் குடித்து, கொக்கரித்துச் சுற்ற, குறைத்தலைப் பிணம் மிதப்ப" பார், (எ-று.)

     (வி-ம்.)கரி - யானை, உதிரநீர் -குருதி. உரும்-இடி. கொக்கரித்தல்-
இரைச்சல்இடல். அலகை-பேய்.  குறைத்தலைப்பிணம் - யானையின் தலை
குறைந்த உடல்.                                            (11)

முதுபேய் பரணிகாட்டத் தொடங்கியது கூறியது

164.அடக்கம் அன்றிதுகி டக்க எம்முடைய
     அம்மை வாழ்கஎன வெம்மைபார!் 
கடக்கம் அன்றபயன் வென்று வென்றிகொள்
   களப்பெ ரும்பரணி இன்றுபார்.

     (பொ-நி.) "இது கிடக்க, அபயன் வென்றிகொள்களப் பெரும் பரணி
இன்று பார் "; (எ-று.)