(பொ-நி.)  நிணங்கள் பார்; நிலங்கள் பார்; பிணங்கள் பார்; பேய்கள்  பார்;(எ-று.)
       (வி-ம்.)நிணம்  - கொழுப்பு,  மணம் - நாற்றம், கனிந்த -முதிர்ந்த   அடங்கலும்-முழுதும். கிடக்க-இருக்க.                           (15) இந்திரசாலம் கண்ட பேய்நிலை கூறியது   |   168. | என்ற போதில் இவை மெய்யெ னாஉட |  |   |     னிருந்த பேய்பதறி ஒன்றன் மேல்     ஒன்று கான்முறிய மேல்வி ழுந்தடிசில்்         உண்ண எண்ணிவெறு மண்ணின்மேல் |          (பொ-நி.)   என்ற  போதில்,  மெய்  எனா,  பேய்,  பதறி, விழுந்து,   உண்ண எண்ணி; (எ-று.)          (வி-ம்.)எனா-என்று. வெறுமண்ணின்மேல்-வெறுந்தரையில். அடிசில்-உணவு.                                                   (16) இதுவும் அது | 169. | விழுந்துகொ ழுங்குரு தீப்புனல் என்று |  |   |     வெறுங்கைமு கந்துமுகந்து     எழுந்துவி ழுந்தசை யென்றுநி லத்தை         இருந்துது  ழாவிடுமே. |   
      (பொ-நி.) 	விழுந்து,  வெறுங்கை  முகந்து,  நிலத்தைத் துழாவிடும்;   (எ-று.)
       (வி-ம்.)கொழும் -செழுமையாகிய, குருதி-செந்நீர். முகந்து-மொண்டு.   தசை-சதை. இருந்து-விட்டகலாமல் இருந்து. துழாவுதல்-கிண்டுதல்.     (17) இதுவும் அது | 170. |   சுற்றநி ணத்துகில் பெற்றனம் என்று |  |   |     சுலாவுவெ றுங்கையவே   அற்றகு றை	த்தலை யென்றுவி சும்பை         அதுக்குமெ யிற்றினவே. |       |