(பொ-நி.) துகில்பெற்றனம் என்று சுலாவுகைய; விசும்பை அதுக்கும் எயிற்றின; (எ-று.)
(வி-ம்.) சுற்ற - சுற்றிக்கொள்ள, நிணத்துகில்-கொழுப்பாகிய ஆடை. சுலாவுதல் - சுற்றிக் கொள்ளுதல். வெறும் கைய - வெறுமையாகிய கைகளையுடைய. விசும்பு-வெறுவெளி. அதுக்குதல் -மெல்லுதல். எயிறு-பல். (18) இதுவும் அது 171. | கயிற்றுறி யொப்பதொர் பேய்வறி தேஉடல் | | கௌவின தொக்கவிரைந்து எயிற்றைய துக்கிநி லத்திடை பேய்கள் இரைத்தன மேல்விழவே. | (பொ-நி.) பேய், கௌவின தொக்க, எயிற்றை அதுக்கி விழ, பேய்கள் நிரைத்தன; (எ-று.)
(வி-ம்.) உறிகயிறு ஒப்பது - உறியின் கயிற்றை ஒத்தது. நரம்பு தோன்ற மெலிந்திருத்தலால், கயிற்றுறி ஒப்பாயிற்று. எயிறு-பல், அதுக்கி- கடிக்க. இரைத்தன-கூச்சலிட்டன. (19) அப்பேய்நிலை கண்ட யோகினி இயல்பு கூறியது 172. | முறம்பல போலந கங்கண்மு றிந்து | | முகஞ்சித றாமுதுகுந் திறம்பிவி லாவிற யோகினி மாதர் சிரித்துவி லாஇறவே. | (பொ-நி.) நகங்கள் முறிந்து முகம்சிதறா, முதுகுந்திறம்பி, விலாவிற, யோகினி மாதர்சிரித்து விலா இறவே; (எ-று.) (வி-ம்.) முறம்-சுளகு. சிதறா-சிதைய. முதுகு திறம்பி-முதுகு மாறி. விறல்-வலிமை. விலா-குறுக்கு எலும்பு.இற-முரிய. (20) பேய்கள் இந்திரசாலத்தை நிறுத்த மொழிந்தது கூறியது 173. | அக்கணம் ஆளும்அ ணங்கினை வந்தனை | | செய்துக ணங்களெலாம் இக்கண மாளும்இ னித்தவிர் விச்சை் எனக்கைவி திர்த்தலுமே. |
|