(பொ-நி.) கணம் அணங்கினை வந்தனைசெய்து, "கணங்களெலாம் மாளும்; விச்சையைத் தவிர்" என, கைவிதிர்த்தலும்; (எ-று.) (வி-ம்.) கணம்-பேய்க்கூட்டம். அணங்கு-காளி. மாளும்-இறக்கும். விச்சை-இந்திரசாலம். கைவிதிர்த்தல் - கைநடுங்குதல். (21) முதுபேய் காளியிடம் மொழிந்தது கூறியது 174. | கொற்றவர்கோன் வாளபயன் அறிய வாழுங் | | குவலயத்தோர் கலையனைத்துங் கூற ஆங்கே கற்றுவந்தார் கற்ற அவன் காணு மாபோல் கடைபோகக் கண்டருள்என் கல்வி யென்றே. | (பொ-நி.) "குவலயத்தோர் கூற, கற்றுவந்தார் கற்ற அவன் காணுமாபோல் என் கல்வி கண்டருள்" என்று. (எ-று.) (வி-ம்.)கொற்றவர்கோன்- அரசர்க்கரசன். அபயன்-குலோத்துங்கன். வாழும்-புகழொடு வாழும். குவலயம்-உலகம். கலை-பல அறிவுத்துறைகள், கற்ற-தாம் கற்றவைகளை, அவன் - குலோத்துங்கன். காணும் ஆ -கண்டறிகின்றவாறு. கடைபோக-முடிய. (22) இந்திரசாலம் நிறுத்தியது கூறியது 175. | வணங்குதலும் கணங்களெலாம் மாயப் பாவி | | மடுத்தெம்மை மறுசூடு சுடுவை யாகில் அணங்கரசின் ஆணைஎன வணங்கும் இப்போது அவைதவிர்எங் கிவைகற்றா யென்ன ஆங்கே. | (பொ-நி.) வணங்குதலும், கணங்களெலாம் "சுடுவையாகில்,ஆணை" என, அணங்கும் "தவிர்" இவை எங்கு கற்றாய்; என்ன; (எ-று.) (வி-ம்.) வணங்குதலும் - முதுபேய் வணங்குதலும். கணம் -பேய்க்கூட்டம். மறித்து-மறுபடியும். சூடு-வருத்துதல். அணங்கரசு-காளி. என-என்றுசொல்ல. அவை-இந்திரசாலம். தவிர்-விட்டுவிடு. (23) |