(பொ-நி.) கரிகாலன், வரைதிரித்தருளி, நிற்க இது என்று புலிக்குறி பொறித்து, அது மறித்தபொழுது; (எ-று.) (வி-ம்.)செண்டு; ஒரு போர்க்கருவி. ஒருகால் -ஒருசமயம், சிமயம்- குவடு. திரித்து - கீழும் மேலுமாகத் திருப்பி, திரித்தல்-நிலை பெறுதல். முதுகில்-நடுவிடத்தில். பொறித்து-எழுதி. அது: இமயம். மறித்த -முன்போல் நிலைநிறுத்திய. (1) நாரதர், கரிகாலனை அணுகி மொழிந்தது கூறியது 179. | கால மும்மையுமு ணர்ந்தருளு நார தனெனும் | | கடவுள் வேதமுனி வந்துகடல் சூழ்பு வியில்நின் போலு மன்னருள ரல்லர் என வாசி புகலாப் புகல்வ தொன்றுளது கேளரச என்று புகல்வான |
(பொ-நி.) வேதமுனி வந்து ஆசி புகலா ழுஅரச, புகல்வது; உளது கேள்' என்று புகல்வான்; (எ-று.) (வி-ம்.)காலம் மும்மை - இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்னும் மூன்று காலமும். ஆசி-வாழ்த்துரை; நல்லுரை. புகலா-புகன்று. (2) இதுவும் அது 180. | பண்டு பாரதமெ னுங்கதைப ராச ரன்மகன் | | கர வெங்கரிமு கன்பரும ருப்பை யொருகைக் கொண்டு மேருசிக ரத்தொருபு றத்தி லெழுதிக் குவல யம்பெறுத வப்பயனு ரைப்ப வரிதால். |
(பொ-நி.) பராசரன் மகன் கதை பகர, கரிமுகன், மருப்பைக்கொண்டு, மேரு சிகரத்து எழுதிக், குவலயம் பெறுதவப்பயன் அரிது; (எ-று.) (வி-ம்.) பராசரன்மகன்; வியாதன். கரிமுகன்-ஆனை முகக் கடவுள். பருமருப்பு - பெரிய கொம்பு. சிகரம்-உச்சி எழுதி; எழுத எனத் திரிக்க. குவலயம்-உலகத்தார். (3) நாரதர், இராசபாரம்பரியம் கூறத்தொடங்கியது கூறியது 181. | பாரதத்தினுள வாகியப வித்ர கதையெம் | | பரம னற்சரிதை மெய்ப்பழைய நான்ம றைகளே நேரதற்கு இதனை நான்மொழிய நீயெழுதி; முன் நெடிய குன்றின்மிசை யேயிசைவ தான கதைகேள். | |