பக்கம் எண் :

74கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.) பவித்ர  கதை  பரமன்  நற்சரிதை (ஆகும்)அதற்கு நேர்
நான்மறைகளே. கதை இதனை நான் மொழிய நீ எழுது, (எ-று.)

     (வி-ம்.) பவித்ரம் - தூயது.  பரமன் - கண்ணன். நல்சரிதை-சிறந்த
வரலாறு. நேர்-ஒப்பு. இசைவது (பாரதத்திற்கு) ஒப்பானது.            (4)

மறையின் இயல்பு கூறியது

182.அதன்மு தற்கண்வரு மாதிமுதன் மாய னிவனே
    அப்ர மேயமெனு மெய்ப்ரியம தாக வுடனே
பதமு மிப்பதம்வ குக்கவரு பாத மதுவும்
   பாத மான சில பார்புகழ வந்த வவையும்.
 
     (பொ-நி.) மாயன்  அப்ரமேயம்  எனும் மெய், அது ப்ரியம் ஆக
உடனே. பதமும், பாதமதுவும், சில பார்புகழ வந்த அவையும்: (எ-று.)

     (வி-ம்.) அது - பாரதம்.  அப்ரமேயம் - அளவிடப்படாதது. மெய்-
பாதம்-பிரிவு.                                                (5)

இதுவும் அது

183.அந்த முட்படவி ருக்குமவ்வி ருக்கின் வழியே
    ஆகி வந்ததவ்வ ருக்கமும் வருக்க முழுதும்
வந்த வட்டகமும் ஒட்டரிய சங்கி தைகளும்
   வாய்மை வேதியர்க டாம்விதியெ னும்வ கையுமே.

     (பொ-நி.) இருக்கும்,   வருக்கமும்,   அட்டகமும்,   சங்கிதைகளும்,
வகையும்; (எ-று.)

     (வி-ம்.)இருக்கு - வேதமந்திரம்.  வருக்கம்:  சில இருக்கு சேர்ந்தது.
அட்டகம் - சில  அத்தியாயங்கள் சேர்ந்தது. ஒட்டு, தொடர்புற்ற சங்கிதை;
எட்டு அட்டகம் சேர்ந்தது. விதி, ஒழுக்கமுறை.                    (6)