திருமாலே அபயனாவனென்பது கூறியது 184. | கமல யோனிமுத லாகவருமுங்கண் மரபிற் | | காவன் மன்னவர்க ளாகிவரு கின்ற முறையால் அமல வேதமிது காணும்இதி லார ணநிலத்து அமல னேயபய னாகஅறி கென்ற ருளியே. |
(பொ-நி.)உங்கள் மரபில், மன்னவர்கள், கமலயோனி முதலாக வருகின்ற முறையால், இது வேதம்,அமலனே அபயனாக அறிக என்றருளி; (எ-று.) (வி-ம்.) கமலயோனி -பிரமன். அமலன்-திருமால். (7) நாரதர், இராசபாரம்பரியம் கூறிச்சென்றது கூறியது 185. | அரணி வேள்வியில கப்படும கண்ட வுருவாய் | | அரவ ணைத்துயிலு மாதிமு தலாக அபயன் தரணி காவலள வுஞ்செலமொ ழிந்து முனிவன் தானெ ழுந்தருள மாமுனிமொ ழிந்த படியே. |
(பொ-நி.) ஆதிமுதலாக அபயன் காவல் அளவும் மொழிந்து முனிவன் எழுந்தருள, முன் மொழிந்தபடி; (எ-று.) (வி-ம்.) அகண்டம்-கூறுபடுத்த முடியாதது. ஆதி - திருமால். தரணி- உலகம். எழுந்தருள-போய்விட. (8) திருமால், நான்முகன், மரீசி, காசிபன், ஞாயிறு வழிமுறை கூறியது 186. | ஆதி மால்அமல நாபிகம லத்து அயனுதித்து | | அயன்ம ரீசியெனு மண்ணலைய ளித்த பரிசும் காதல் கூர்தரும ரீசிமக னாகி வளரும் காசி பன்கதிர் அருக்கனைய ளித்த பரிசும் |
(பொ-நி.) திருமாலின் உந்திக் கமலத்தில் நான்முகன் தோன்றினான், நான்முகன் மரீசியைப் பெற்றான். மரீசி காசிபனைப் பெற்றான். காசிபன் கதிரவனை(சூரியனை)ப் பெற்றான். (எ-று.) (வி-ம்.) மால்-திருமால். நாபி-உந்தி (கொப்பூழ்.) அயன்-நான்முகன். அருக்கன்-கதிரவன். (9) |