பக்கம் எண் :

76கலிங்கத்துப்பரணி

மனு, இக்குவாகு சிறப்புக் கூறியது

187.அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதி னிபுரந்து
      அரிய காதலனை ஆவினது கன்று நிகரென்று
எவ்வ ருக்கமும்வி யப்பமுறை செய்த பரிசும்,
     இக்கு வாகுஇவன் மைந்தனென வந்த பரிசும்.
 

     (பொ-நி.) மனு  அருக்கன்  மகனாகிப்  புரந்து முறைசெய்தகதையும், இக்குவாகு இவன் மைந்தன் என வந்த பரிசும்; (எ-று.)

     (வி-ம்.) அருக்கன் - ஞாயிறு.  மனு -மனுச்சோழன். மேதினி-உலகம்.
காதலன்-புதல்வன். வருக்கம்-மக்கட்கூட்டம். பரிசு-தன்மை.           (10)
                  

ககுத்தன் சிறப்புக் கூறியது

188.இக்கு வாகுவின்ம கன்புதல்வ னான உரவோன்
      இகலு வோன் இகலு ரஞ்செய்துபு ரந்த ரனெனும்
சக்கு வாயிரமு டைக்களிறு வாகனமெனத்
     தானி ருந்துபொரு தானவரை வென்ற சயமும்.  

     (பொ-நி.) உரவோன், களிறு வாகனம் என இருந்து பொருதானவரை
வென்ற சயமும்: (எ-று.)

     (வி-ம்.) மகன் புதல்வன்-பேரன். உரம்-வலிமை. உரவோன்-ககுத்தன்.
இகல்-பகை. புரந்தரன்-இந்திரன். ஆயிரம் சக்கு -ஆயிரம் கண்.  தானவர்-
அசுரர்.                                                    (11)

மாந்தாதா, முசுகுந்தன் சிறப்புக் கூறியது

189.ஒருது றைப்புனல்சி னப்புலியும் மானுமுடனே
      உண்ண வைத்தவுர வோனுலகில் வைத்த அருளும்
பொருது றைத்தலைபு குந்துமுசு குந்தன் இமையோர்
     புரம டங்கலும ரண்செய்துபு ரந்த புகழும்.
 
 
     (பொ-நி.) புலியும் மானும் புனல் உண்ணவைத்த உரவோன் வைத்த
அருளும் ; முசுகுந்தன்; புகுந்து, புரந்த புகழும்; (எ-று.)