பக்கம் எண் :

இராசபாரம்பரியம்77


     (வி-ம்.) புனல் -  நீர்.  உரவோன் - மாந்தாதா. பொருதுறைத்தலை -
போர்க்களம். இமையோர்புரம்-தேவலோகம். அடங்கலும் - முழுதும். அரண்-
காவல். புரத்தல்-பாதுகாத்தல்.                                    (12)

பிருதுலாட்சன், சிபிச் சிறப்புக் கூறியது

190.கடல்க லக்கவெழு மின்னமுது தன்னை யொருவன்
      கடவுள் வானவர்க ளுண்ண அருள் செய்தகதையும்
உடல்க லக்கறஅ ரிந்துதசை யிட்டும் ஒருவன்
    ஒருது லைப்புறவொடு ஒக்கநிறை புக்க புகழும்.

     (பொ-நி.)  ஒருவன்,  இன்னமுது   தன்னை,  வானவர்கள்  உண்ண
அருள்செய்த கதையும்,  ஒருவன்  தசையிட்டு, நிறைபுக்க  புகழும; (எ-று.)

     (வி-ம்.) கலக்க-கடைய. வானவர்- தேவர். கலக்கு அற - மனக்கலக்கம்
அற. அரிந்து-அறுத்து. தசையிட்டு-புலாலைவைத்து, துலை-துலாத்தட்டு, புறவு-
புறா. நிறை-எடையாக.                                          (13)

சுராதிராசன், இராசகேசரி, பரகேசரி சிறப்புக் கூறியது

191.சுராதி ராசன்முத லாகவரு சோழன் முனநாள்
      சோழ மண்டல மமைத்தபிற கேழுலகையும்
இராச கேசரிபு ரந்துபர கேச ரிகளாம்
    இருவ ராணைபுலி யாணையென நின்ற புகழும்.

     (பொ-நி.) வருசோழன்  சுராதிராசன்  சோழமண்டலம் அமைத்தபிறகு,
இருவர், புரந்து, ஆணை, புலி ஆணை என நின்ற புகழும்; (எ-று.)

     (வி-ம்.) சுராதிராசன் - சுராதிராசனென்பவன்.  ஆணை - கட்டளை .
முதலாகஅமைத்து   என   இயைக்க.   இருவர்   புரந்து   என   இயைக்க.
(அவர்கள்)ஆணை  புலி  ஆணை  எனவே,  புலிப்பொறி  கொள்ளப்பட்டது
குறித்தவாறாம்.                                                 (14)

கிள்ளிவளவன், கவேரன் இராசேந்திரமிருத்யுசித்துசிறப்புக் கூறியது

192. கால  னுக்கிதுவ  ழுத்கெனவு ரைத்த வவனும்
    காவி ரிப்புனல்கொ ணர்ந்தவவ னும்பு வனியின்
மேல னைத்துயிரும் வீவதிலை யாக நமன்மேல்
    வென்றி கொண்டவனு மென்றிவர்கள் கொண்டவிறலும்.