(பொ-நி.) உரைத்த அவனும், கொணர்ந்த அவனும் நமன்மேல் வென்றி கொண்டவனும் என்று இவர்கள் கொண்ட விறலும்; (எ-று.) (வி-ம்.)காலன்-இயமன். வழக்கு-முறைமை. புவனி - உலகம், வீவது - இறப்பது. நமன்-இயமன். வென்றி-வெற்றி. விறல்-வெற்றி. (15) சித்திரன், சமுத்திரசித்து பஞ்சபன் முதலியோர்சிறப்புக் கூறியது 193. | புலியெ னக்கொடியி லிந்திரனை வைத்த வவனும் | | புணரி யொன்றினிடை யொன்றுபுக விட்டவவனும் வலியி னிற்குருதி உண்கெனவ ளித்த வவனும் வாத ராசனைவ லிந்துபணி கொண்ட வவனும் |
(பொ-நி.) இந்திரனை வைத்த அவனும், புகவிட்ட அவனும், அளித்த அவனும், பணிகொண்ட அவனும்; (எ-று.) (வி-ம்.)கொடியில்-தன் கொடியிடத்தில். புணரி-கடல். குருதி - செந்நீர். வாதராசன்-வாயுதேவன்; காற்றுக் கடவுள். (16) தூங்கெயில் எறிந்தோன், உபரிசரன் முதலியோர்சிறப்புக் கூறியது 194 | தூங்கு மூன்றெயி லெறிந்தவவ னுந்தி ரண்மணிச் | | சுடர்வி மானமது வான்மிசையு யர்த்த வவனும் தாங்கள் பாரதமு டிப்பளவுநின்று தருமன் தன்க டற்படைத னக்குதவி செய்த வவனும். |
(பொ-நி.) தூங்கெயில் எறிந்த அவனும், விமானமது உயர்த்த அவனும், உதவிசெய்த அவனும். (எ-று.) (வி-ம்.) தூங்கு - அசைந்து செல்கின்ற. திரள் மணி - கூட்டமாகிய ஒளிமணிக்கற்கள். சுடர் விமானம்-ஒளியுள்ள விமானம். வான்-வானம். எயில் - மதில். எறிதல்-அழித்தல். (17) |