பக்கம் எண் :

இராசபாரம்பரியம்79


கிள்ளிவளவன், செங்கணான் சிறப்புக் கூறியது

195.தளவ ழிக்குநகை வேல்விழிபி லத்தின் வழியே
      தனிந டந்துரகர் தங்கண்மணி கொண்ட வவனும்
களவ ழிக்கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
    கால்வ ழித்தளையை வெட்டியர சிட்ட வவனும்.

     (பொ-நி.)  உரகர்தம்    கண்மணி    கொண்ட  அவனும்;  உதியன்
கால்வழித்தளையை வெட்டி அரசிட்ட அவனும்; (எ-று.)

     (வி-ம்.)தளவு - முல்லை. நகை - முறுவல்.  பிலம் - குகை உரகர்தம்
கண்மணி-நாககன்னிகை. களவழி-களவழி  நாற்பது என்னும் நூல். பொய்கை -
பொய்கையாரென்னும் புலவர். உதியன்-சேரமான்  கணைக்கால் இரும்பொறை,
தளை-விலங்கு. இட்ட-வைத்த. அவன்: செங்கணான்.                 (18)

கரிகாலன், சேரபாண்டியர்களை வென்றது கூறியது

196.என்று மற்றவர்கள் தங்கள்சரி தங்கள் பலவும்
     எழுதி மீளஇதன் மேல்வழுதி சேரன் மடியத்
தன்த னிக்களிற ணைந்தருளி வீர மகள்தன்
    தனத டங்களொடு தன்புயம ணைந்த பரிசும்.

     (பொ-நி.) என்று சரிதங்கள் பலவும் எழுதி, மீள, இதன் மேல், வழுதி,
சேரன் மடிய, களிறணைந்தருளி, அணைந்த பரிசும:் (எ-று.)

     (வி-ம்.) இது:  இமயம்.  வழுதி - பாண்டியன். தனிக்களிறு - ஒப்பற்ற
ஆண்யானை. அணைந்து- மேற்கொண்டு. வீரமகள் -வெற்றி மங்கை. தனம் -
கொங்கை.                                                   (19)

கரிகாலன், பிரதாபருத்திரன் கண்கொண்டது கூறியது

197. தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
     தொடர வந்திலா முகரி யைப்படத்து
எழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்று
    இங்க ழிக்கவே அங்க ழிந்ததும்,