பக்கம் எண் :

80கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.) பொன்னியில்,  வந்திலா  முகரியை,  எழுதுகென்று, கண்டு,
இங்கு அழிக்கவே அங்கு அழிந்ததும்; (எ-று.)

     (வி-ம்.)பொன்னி-காவிரி. முகரி - வீண்    ஆரவார   முடையோன்;
பிரதாபருத்திரன். படத்து - படத்தினிடத்து. மிகை-வேண்டாதது. இங்கு
அழிக்க-இவ்விடத்துச் சிதைக்க.                                 (20)

கரிகாலன், பட்டினப்பாலை கொண்டது கூறியது

198தத்து நீர்வரால் குருமி வென்றதுந்
    தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப்
   பண்டு பட்டினப் பாலை கொண்டதும்,

     (பொ-நி.) குருமி வென்றதும். பரிசில்வாணர்,  பத்தோடாறு நூறாயிரம்
பெறப் பட்டினப்பாலை கொண்டதும்; (எ-று.)

     (வி-ம்.) வரால்-மீன்வகை. தத்து - தாவி யோடுகின்ற. பரிசில்வாணர் -உருத்திரங் கண்ணனார். பத்தொடு  ஆறு  நூறாயிரம் - பதினாறு   இலக்கம்.
பட்டினப்பாலை:  பத்துப் பாட்டுள் ஒன்று. குருமி: குருமியென்னும் ஒரு  நகர்;
கடப்பை மாவட்டத்துள்ளது.                                      (21)

கரிகாலன், சேர பாண்டியரை மானக்கேடு செய்தது கூறியது

199ஒருவர் முன்னோர்நாள் தந்து பின்செலா
    உதியர் மன்னரே மதுரை மன்னரென்று
இருவர் தம்மையும் கிழிகள் சுற்று வித்து
   எரிவி விளக்குவைத்து இகல்வி ளைத்ததும்.

     (பொ-நி.) ஒருவர்  முன்பின்  தந்து  செலா இருவர் தம்மையும், கிழி
சுற்றுவித்து, விளக்குவைத்து இகல் விளைத்ததும்: (எ-று.)

     (வி-ம்.) ஒருவர்: பகைவர். ஓர்நாள் - ஒருநாளும். பின் தந்து  செலா-புறக்கொடை கொடாத. உதியர்: சேரர். கிழி-தந்தை. எரி  விளக்கு - எரிகின்ற
விளக்கு.  வைத்து  -  தலையில்  வைத்து.  இகல்  - வலிமை. விளைத்தது -
தோற்றுவித்தது.                                               (22)