அலைகளையுடைய. குரை கடாரம் - பல்வகை ஒலிகளையுடைய கடாரம்.அலை- ஒலி செய்கின்ற. மண்டலம் - உலகம். குடையுள்வைத்தல்- தன் வெண்கொற்றக் குடையின் கீழ் அடக்கியதும். (25) இராசாதிராசன் சிறப்புக் கூறியது 203. | கம்பி லிச்சயத் தம்ப நட்டதும் | | கடிய ரண்கொள்கல் யாணர் கட்டறக் கிம்பு ரிப்பணைக் கிரியு கைத்தவன் கிரிக ளெட்டினும் புலிபொ றித்ததும் |
(பொ-நி.) கிரி உகைத்தவன், சயத்தம்பம் நட்டதும்,கல்யாணர் கட்டற; புலி பொறித்ததும்; (எ-று.) (வி-ம்.) கம்பிலி; ஒரு நகரம். சயத்தம்பம்-வெற்றித்தூண். கடி அரண் - காவலையுடைய மதில்கள். கல்யாணர் - சளுக்கியர். கட்டற -நிலைகுலைய. கிம்புரி - யானைத் தந்தத்தில் அணியும் பூண். பணை - யானை கட்டுமிடம். கிரி - யானை.(26) இராசேந்திரதேவன் சிறப்புக் கூறியது 204. | ஒருக ளிற்றின்மேல் வருக ளிற்றையொத்து | | உலகு யக்கொளப் பொருது கொப்பையிற் பொருக ளத்திலே முடிக வித்தவன் புவிக விப்பதோர் குடைக வித்ததும். |
(பொ-நி.) களிற்றை ஒத்து, கொப்பையிற் பொருது, முடிகவித்தவன் குடைகவித்ததும்; (எ-று.) (வி-ம்.)வருகளிறு-(ஏறி) வருகின்ற யானை. உயக்கொள-பிழைத்தலைப் பெறுமாறு. கொப்பை; ஓர் ஊர். பொருது-போர்செய்து. புவி-உலகம். கவித்தது தன் முடிமீதென்க. (27) இராசமகேந்திரன் சிறப்புக் கூறியது 205. | பனுவலுக்கு முதலாய வேத நான்கில் | | பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கண் மனுவி னுக்கு மும்மடி நான் மடியாஞ் சோழன் மதிக்குடைக்கீ ழறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும், |
|