(பொ-நி.) நெறி புதுக்கி, நான்மடி ஆம் சோழன் குடைக்கீழ் அறம் வளர்ந்த ஆறும்; (எ-று.) (வி-ம்.) பனுவல்-நூல். முதல் ஆய-முதன்மையான. பண்டு- முன்பு. புதுக்கி-புதுப்பித்து. மும்மடி-மூன்று மடங்கு. ஆம் - சிறந்தவன் ஆகிய; சோழனது குடை என்க. அறம் தளிர்ப்ப-அறம் தழைக்கும்படி. (28) முதற்குலோத்துங்கன் தோற்றம் கூறியது 206. | குந்தளரைக் கூடற்சங் கமத்துவென்ற | | கோனபயன் குவலயங்காத் தளித்த பின்னை இந்தநிலக் குலப்பாவை இவன்பாற் சேர என்ன தவஞ் செய்திருந்தாள் என்னத் தோன்றி. |
(பொ-நி.) அபயன் அளித்த பின்னை பாவை சேர என்ன தவம் செய்திருந்தாள் என்னத் தோன்றி; (எ-று.) (வி-ம்.) குந்தளர் - குந்தளநாட்டு வீரர். கூடல் சங்கமம் - கூடற் சங்கமமென்னும் இடம். கோன்-அரசன். குவலயம்-உலகம். குலம்-மேன்மை. தோன்றி-பிறந்து. (29) குலோத்துங்கன் வெற்றிச் சிறப்புக் கூறியது 207. | எவ்வளவு திரிபுவன முளவாய்த் தோன்றும் | | எவ்வளவு குலமறைக ளுளவாய் நிற்கும் அவ்வளவு திகிரிவரை யளவுஞ் செங்கோல் ஆணைசெல்ல வபயன் காத் தளிக்கு மாறும். |
(பொ-நி.) எவ்வளவு புவனம் தோன்றும், எவ்வளவு மறைகள் நிற்கும், அவ்வளவு திகிரிவரை அளவும், ஆணைசெல்ல அளிக்கும் ஆறும்; (எ-று.) (வி-ம்.) திரிபுவனம்-மூன்று உலகம். மறை-வேதம். வேத நெறிப்பட்ட நாடு முழுவதும் என்க. திகிரிவரை-சக்கரவாளமலை. ஆணை -கட்டளை. (30) கரிகாலன் இமயத்தில் எழுதி முடித்தது கூறியது 208. | இப்பு றத்திமய மால்வரையின் மார்பி னகலத்து | | எழுதி னானெழுது தற்கரிய வேத மெழுதி ஒப்பு றத்தனது தொன்மரபு மம்ம ரபின்மேல் உரைசெய் பல்புகழுமொன் றுமொழி யாதபரிசே. |
|