(பொ-நி.) மரபும், புகழும், ஒன்றும் ஒழியாத பரிசுவரையின் மார்பின் அகலத்து, வேதம் எழுதி ஒப்புற, எழுதினான்; (எ-று.) (வி-ம்.) இப்புறம்-தென்புறம். மார்பு-நடுஇடம். அகலம் - பரந்த இடம், எழுதி ஒப்புற-எழுதினால் ஒப்ப, பரிசு-தன்மை. (31) முதுபேய் சொல்லி முடித்ததும் காளி வியந்ததும் கூறியது 209. | எழுதி மற்றுரைசெய் தவரவர்கள் செய்பி ழையெலாம் | | எமர்பொ றுக்கஎன விப்படிமு டித்த இதனைத் தொழுது கற்றனம் எனத்தொழுது சொல்லு மளவில் சோழ வம்சமிது சொன்ன அறிவென்ன வழகோ? |
(பொ-நி.) எழுதி, பொறுக்க, என இப்படி முடித்த இதனை, கற்றனம் எனச் சொல்லுமளவில், "சொன்ன அறிவு என்ன அழகோ," (எ-று.) (வி-ம்.) உரை செய்தல்-சொல்லல், எமர்-எம்மவர். சோழவம்சம்-சோழ பரம்பரை. (32) காளி குலோத்துங்கனை நினைந்து மகிழ்தல் கூறியது 210. | வையகமாங் குலமடந்தை மன்னபயன் | | தன்னுடைய மரபு கேட்டே ஐயனையான் பெற்றெடுத்த அப்பொழுதும் இப்பொழுதொத் திருந்த தில்லை. |
(பொ-நி.) அபயன் மரபுகேட்டு, இப்பொழுது ஒத்து பெற்றெடுத்த அப்பொழுதும் இருந்ததில்லை; (எ-று.) (வி-ம்.) வையகம்- உலகம். குலம்-மேன்மை. மன்-தலைவன். அபயன்- குலோத்துங்கன். மரபு- குலமுறை. ஐயன்: குலோத்துங்கன், அப்பொழுதும் - அவனைப் பெற்றெடுத்த அக்காலத்தும். இப்பொழுதும்-இப்பொழுது அடையும் மகிழ்ச்சி. காளி குலோத்துங்கன் புகழைக் கேட்டதும் தன் மகனாகக் கொண்டு பெற்றகாலத்துப் பெற்ற மகிழ்ச்சியினும் இப்போது பன்மடங்குமகிழ்கூர்ந்ததாகக் கூறினாள்; ழுஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என வள்ளுவனாரும், ழுஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே' |