பேய்கள் காளியிடம் தம் மிகுபசி மொழிந்தது கூறியது 212. | ஆறுடைய திருமுடியா னருளுடைய | | பெருந்தேவி அபயன் காக்கும் பேறுடைய பூதமாப் பிறவாமல் பேய்களாப் பிறந்து கெட்டேம். |
(பொ-நி.) "தேவி ! அபயன் காக்கும் பூதமாப் பிறவாமல்பேய்களகப் பிறந்து கெட்டோம்," (எ-று.) (வி-ம்.) ஆறு-கங்கை. முடியான்-சிவன். அருள் உடைய - திருவருள் கொண்ட. பூதங்களுக்குப் பலியிடல் அரசர் வழக்கம். (1) இதுவும் அது 213. | ஆர்காப்பா ரெங்களைநீ யறிந்தருளிக் | | காப்பதல்லால் அடையப் பாழாம் ஊர்காக்க மதில்வேண்டா உயிர்காத்த உடம்பினைவிட் டோடிப் போதும். |
(பொ-நி.) நீ காப்பதல்லால் ஆர் காப்பார்; பாழ்ஆம் ஊர்காக்க மதில் வேண்டா; உடம்பினை விட்டு ஓடிப்போதும், (எ-று.) (வி-ம்.) அடைய-முழுவதும். ஓடிப்போதும்-இறப்போம். இதுவும் அது 214. | ஓய்கின்றேம் ஓய்வுக்கு மினியாற்றேம் | | ஒருநாளைக் கொருநாள் நாங்கள் தேய்கின்ற படிதேய்ந்து மிடுக்கற்றேம் செற்றாலும் உய்ய மாட்டோம். |
(பொ-நி.) ஓய்கின்றேம்; ஆற்றேம்; தேய்ந்து மிடுக்கற்றேம் ;உய்யமாட்டோம்; (எ-று.) (வி-ம்.)ஓய்தல்-தளர்ச்சியடைதல். ஆற்றேம்-தாங்கமாட்டோம்;தேய்ந்து- மெலிந்து. மிடுக்கு-எழுச்சி. செறுதல்-சினத்தல். உய்ய-பிழைக்க. (3) |