பக்கம் எண் :

90கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) கரி-(ஆண்)யானை. மருப்பு-தந்தம். புலர்தல்- வற்றுதல். பிடி-
பெண்யானை. முகில்-மேகம். குருதி-செந்நீர். காலுதல்-உமிழ்தல்.          (11)

இதுவும் அது

223வார்முரசி ருந்துவறி தேஅதிரு மாலோ
   வந்திரவில் இந்திரவில் வானிலிடு மாலோ
ஊர்மனையில் ஊமனெழ ஓரியழு மாலோ
  ஓமவெரி ஈமவெரி போல்கமழு மாலோ .

     (பொ-நி.) முரசு வறிதே அதிரும்; இந்திரவில் இரவில் இடும்;மனையில்
ஊமன் எழ, ஓரி அழும்; ஓமஎரி ஈமஎரிபோல் கமழும்; (எ-று.)

     (வி-ம்.)வார்முரசு - வாரால் கட்டப்பட்ட  பேரிகை. வறிதே - வீணே.
மனை-வீடு. இந்திரவில்- வானவில். ஊமன்- பேராந்தை. ஓரி - நரி. ஓம எரி-
வேள்வி எரி. ஈமம்-சுடுகாடு. கமழும் -(தீநாற்றம்) வீசும்.                (12)

இதுவும் அது

224பூவிரியு மாலைகள்
    புலால்கமழு மாலோ
பொன்செய்மண மாலைஒளி
  போயொழியு மாலோ
ஓவியமெ லாம்உடல்
  வியர்ப்பவரு மாலோ
ஊறுபுனல் செங்குருதி
  நாறவரு மாலோ .

     (பொ-நி.) மலைகள்புலால் கமழும்; மணிமாலை ஒளி ஒழியும்; ஓவியம்
எலாம் உடல் வியர்ப்ப வரும், புனல் குருதி நாறவரும்; (எ-று.)

     (வி-ம்.) மணி-இரத்தினம். ஓவியம்-சித்திரம், புனல்-நீர். குருதி-செந்நீர்.
நாற-தோன்ற.                                                  (13)