கேட்ட காளி மொழியத் தொடங்கியது 225 | எனாவுரைமு டித்ததனை | | என்கொல்விளை வென்றே வினாவுரைத னக்கெதிர் விளம்பின ளணங்கே . |
(பொ.நி.) உரையதனை முடித்து, வினா உரை தனக்கு அணங்கு எதிர் விளம்பினள்; (எ-று.) (வி-ம்.) எனா - என்று. உரை - சொல். விளைவு - விளையும் பயன். அணங்கு-காளி. எதிர் விளம்பினள்- மறுமொழி கூறினாள். (14) இதுவும் அது 226 | உங்கள் குறியும் வடகலிங்கத் | | துள்ள குறியும் உமக்கழகே நாங்கள் கணிதப் பேய்கூறும் நனவும் கனவும் சொல்லுவோம். |
(பொ.நி.) உங்கள் குறியும் வடகலிங்கத்துள்ள குறியும்அழகே; கணிதப் பேய்கூறும் நனவும் கனவும் சொல்லுவாம். (எ-று.) (வி-ம்.) குறி-நிமித்தம். உமக்கு அழகு - உமக்கு நன்மையே. கணிதம்- சோதிடம். நனவு-விழிப்பிற் கண்டன. (15) காளி மொழிந்தது 227 | நிருபரணி வென்ற அகளங்கன்மத | | யானைநிக ளங்களொடு நிற்பன வதற்கு ஒருபரணி யுண்டெனவு ரைத்தன உரைப்படி உமக்கிது கிடைக்கு மெனவே. |
(பொ.நி.) அகளங்கன் மதயானை நிற்பன (ஆகிய) அதற்கு; பரணி உண்டென உரைத்தன. இஃது உமக்குக் கிடைக்கும் என; (எ-று.) |