பக்கம் எண் :

92கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) அணி-வரிசை; (பலர் என்றபடி)அகளங்கன்- குலோத்துங்கன்.
நிகளம்-யானை கட்டும் காற்சங்கிலி. நிற்பன  ஆகிய அதற்கு என்க. பரணி -
பரணிப்போர்.                                                (14)

பரணி உண்டெனக் கேட்ட பேய்நிலை

228தடித்தனமெ னத்தலைத டித்தனமெனப்பல
    தனிப்பனைகு னிப்ப வெனவே
நடித்தனந டிப்பவலி யற்றனகொ டிற்றையு
  நனைத்தனஉ தட்டி னுடனே.

     

     (பொ-நி.) பனை  குனிப்ப  என, "தடித்தனம்" என "தடித்தனம்" என
நடித்தன; நடிப்பவலி அற்றன; கொடிற்றையு  நனைத்தன; (எ-று.)

     
(வி-ம்.) தடித்தனம்-பருத்தோம்,தலை-உடலிடம். பனை-பனைமரங்கள்.
குனித்தல்-கூத்தாடல். கொடிறு-கன்னம். நனைத்தன- வாய்நீர்  ஊறினமையால்
நனைக்கலாயின.                                               (17)


இதுவும் அது      

229விலக்குகவி லக்குகவி ளைத்தன எனக்களி
    விளைத்தன இளைத்த னவிலா
அலக்குகஅ லக்குகஅ டிக்கடிசி ரித்தன
  அயர்த்தனப சித்த பசியே.

     (பொ-நி.) களிவிளைத்தன; அடிக்கடி சிரித்தன; பசி அயர்த்தன;(எ-று.)

     (வி-ம்.)  விலக்குக   -   தவிர்க.    விளைத்தன    -  விளைத்த
கூத்து. களிவிளைத்தன - மகிழ்ச்சி   மிகுந்தன.  இளைத்தனவாகிய அலக்கு,
விலா   அலக்கு  -  விலா   எலும்பு.  உக -  ஒடியும்படி. பசித்த   பசி -
தமக்குண்டான பசியினை. அயர்த்தன - மறந்தன.                   (18)

இதுவும் அது

230ஆடியிரைத் தெழுகணங்கள்
    அணங்கேயிக் கலிங்கக்கூழ்
கூடியிரைத் துண்டுழியெம்
  கூடாரப் போதுமோ.