(பொ-நி.) கணங்கள் "அணங்கே, கூழ் எம்கூடுஆர, கூடி இரைந்து உண்டுழிப் போதுமோ;" (எ-று.) (வி-ம்.) இரைத்து-இரைந்து, கணம்-பேய்க் கூட்டம். அணங்கு - காளி. கூழ்-உணவு. கூடி-ஒன்றுபட்டு. கூடு-வயிறு. ஆர்தல்-நிறைதல். (19) காளி பேய்கட்கு மொழிந்தது 231 | போதும்போ தாதெனவே | | புடைப்படல மிடவேண்டா ஓதஞ்சூ ழிலங்கைப்போர்க்கு ஒட்டிரட்டி கலிங்கப்போர். |
(பொ-நி.) புடைப்படலம் இடவேண்டா; கலிங்கப் போர்இலங்கைப் போர்க்கு ஒட்டிரட்டி; (எ-று.) (வி-ம்.) புடை - பக்கம், படலம்-கூட்டம். ஓதம் - கடல். ஒட்டிரட்டி - ஒன்றுக்கு இரு மடங்கு. (20) __________ 10. அவதாரம் [குலோத்துங்கனால் ஒரு பரணிப்போர் உண்டு என்று கூறிய காளி, அக் குலோத்துங்கன் பெருமையைக் கூறப்புகுகின்றாள். ழுஇலங்கைப் போர் இயற்றிய திருமாலே பாரதப் போரை முடித்துப் பின் கலிங்கப்போர் நிகழுமாறு, சளுக்கிய குலத்து இராசராசன் மனைவியும், கங்கைகொண்ட சோழன் மகளுமான அம்மங்கைதேவியின் வயிற்றில் வந்து பிறந்தான் பிறந்த போதே கங்கை கொண்டசோழன் மனைவி , பிறந்த பேரனைத் தன் கையால் எடுத்தணைத்துத் தன் மைந்தர்க்குப் புதல்வர்பேறு இன்மையும்,பேரன் அரசர்க்குரிய எல்லா இலக்கணமும் பெற்றுவிளங்கலையும் நோக்கி, ழுஇவனே எங்கள் குலத்துக்கும் மகனாகி, எங்குலத்தை விளங்கச் செய்வான்' என்று கூறி மகிழ்ந்தனள். இங்ஙனம் பிறந்தவன், அடிவைத்து நடைபயின்றும், ஐம்படைத்தாலி அணிந்தும், மழலை மொழிந்தும், முந்நூல் அணிந்தும், மறை கற்றும், படைக்கலம் பயின்றும், யானை ஏற்றம் குதிரை ஏற்றம் பயின்றும், பல்கலை கற்றும் சிறந்தனன். இங்ஙனமாகக் கங்கை கொண்ட சோழனின் நான்காம்புதல்வனாகிய வீரராசேந்திரன் (தன் உடன் பிறந்தான் மகனாகியஇக்) குலோத்துங்கனை இளவரசாக்கினன். |