மிடைந்து வந்தன; புலிக்கொடி மேலோங்கி விளங்கியது. இருபுறத்தும் மகளிர் திரண்டு நின்றனர். இங்ஙனம் தென்றிசையினின்றும் புறப்பட்டு வடதிசை நோக்கிச் செல்லும் குலோத்துங்கன் தில்லையம்பதி யடைந்தனன். தில்லைக்கூத்தன் அருள்பெற்று விடைகொண்டு புறப்பட்டுத் திருவதிகை சென்று படையுடன் இறுத்தனன். பின்அங்கு நின்றும் புறப்பட்டு இடையிடையே தங்கிக் காஞ்சிநகர் அடைந்தனன்.' இங்ஙனம் காளி பேய்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், கலிங்கப்போர் மூண்டெழுந்ததாக, அதைக் கண்டதொரு பேய் ஆண்டு நின்றும் ஓடிவந்து காளியை யடைத்து, "கலிங்கம் நிறையக் கலிங்கர் குருதி, குருதி இனி எழுக, எழுக," எனக் கூவி மொழிந்தது. அதுகேட்ட பேய்கள் மகிழ்ச்சியால் குதித்துக் கூத்தாடி இரைந்தன. அவ்வளவில் காளி பேய்கள் ஆடல் பாடல்களை நிறுத்துமாறு கூறிக் கலிங்கப் பேயை நோக்கி, ஆண்டு நிகழும் போரின் இயல்பைக் கூறுமாறு பணித்தனன் இவ்வளவில் அவதாரப்பகுதி முடிவுறுகிறது.] காளி, பேய்களுக்குத் திருமாலே குலோத்துங்கனாகப் பிறந்தானென மொழிந்தமை 232 | அன்றிலங்கை பொருதழித்த அவனே அப் | | பாரதப்போர் முடித்துப் பின்னை வென்றிலங்கு கதிராழி விசயதரன் எனஉதித்தான் விளம்பக் கேண்மின்! |
(பொ-நி.) கேண்மின் இலங்கை பொருதழித்த அவனே போர்முடித்து, பின்னை. விசயதரன் என உதித்தான்; (எ-று.) (வி-ம்.) அவன்-இராமன்(திருமால்.) முடித்து-கண்ணனாகத் தோன்றி முடித்து என்க. ஆழி-சக்கரம் ; ஆணைச் சக்கரம். விசயதரன்-குலோத்துங்கன். (1) திருமால் கண்ணனாகப் பிறந்தது 233 | தேவரெலாங் குறையிரப்பத் தேவகிதன் | | திரிவயிற்றில் வசுதே வற்கு மூவுலகுந் தொழநெடுமால் முன்னொருநாள் அவதாரஞ் செய்த பின்னை. |
|