யுமா?' என்று வினவினார்.
அவன் தெரியும் என்றான். ‘பிரணவத்திற்குப்
பொருள் தெரியுமா?' என்றார். தெரியாமையால் அவன் விழித்தான்.
‘பிரணவத்தின் பொருள் தெரியாத நீயா உலகைப் படைக்கும் பெரிய
தொழிலுக்கு ஏற்றவன்?' என்று கூறி அவன் தலைகளிலே குட்டினார்.
பிறகு சிறையி லடைத்து விட்டார்.
கதை
: 3. சிவபிரானுக்குப்
பிரணவத்தைக் கூறியது : நான்முகன்
சிறையில் அடைபட்டதை அறிந்த வானவர்கள் சிவபிரானிடம்
முறையிட்டனர். அவர் எழுந்தருளி வந்து முருகக் கடவுளிடமிருந்து
நான்முகனை விடுவித்தார். பிறகு, ‘நீ பிரணவத்தின் பொருளை
அறிவையோ?' என்று வினவினார். அவர் ‘அறிவேன்' என்றார்.
‘அங்ஙனமாயின் கூறுவாயாக!' என்றார். ‘அது மறை ஆகையால்
ஆசிரியனிடம் மாணவன் பெற்றுக் கொள்வதுபோல ஏற்றுக்கொள்வதானாற்
கூறுகிறேன்' என்று குமரக்கடவுள் கூறினார். சிவபிரான் அவ்வாறே அவரை
உயர்ந்த இருக்கையில் எழுந்தருளச் செய்து, தாம் மாணவர்போல எதிரே
நின்றார். முருகக் கடவுள் சிவபிரான் திருச்செவியிலே பிரணவ மந்திரத்தைக்
கூறியருளினார்.
கதை:
4. சூரபதுமன்
இரு கூறானது: சூரபதுமன் அழியாவரம்
பெற்றவன். ஆகவே, அவனை வடிவேலால் இரண்டாகப் பிளந்தவுடன்
சேவலும் மயிலுமாக மாறினான். சேவலைக் கொடியாகவும் மயிலை
ஊர்தியாகவும் முருகக் கடவுள் கொண்டார்.
(அருஞ்சொற்கள்)
புனிதம்
(வடமொழி) - தூய்மை (குற்றமின்மை)
உபதேசம் (வடசொல்) - சொல்லிக்கொடுத்தல். போதம் - அறிவு, தே
(வடமொழி) - தெய்வம். செகுத்தல் - வீழ்த்துதல், தேகம் (வடமொழி) -
உடம்பு, அமரர் (வடமொழி) - இறவாதவர், நேமி (வடமொழி) - உலகம்,
இடர் - துன்பம், நிதம் ; நித்தம் என்னும் வடமொழி திரிந்து நின்றது,
நித்தம் - அன்றாடம். மா - வண்டு, பருகுதல் - குடித்தல், பூ - அழகு.
(கருத்து)
குமரக்கடவுளே சிறந்த தெய்வம். (1)
2.
அந்தணர் இயல்பு
குறையாத
காயத்ரி யாதிசெப மகிமையும்,
கூறுசுரு திப்பெருமையும்,
கோதிலா ஆகம புராணத்தின் வளமையும்,
குலவுயா காதிபலவும்,
|
|