பக்கம் எண் :

97

கண்டு முடிவான பொருளைக் கூறுவது ஆசிரியன் கடமை; சொன்னநெறி
தவறாமல் வழிபாடு செய்துவரு துய்யனே இனிய சீடன் - ஆசிரியன் கூறிய
ஒழுக்கந் தவறாமல் தொண்டு செய்து வருவது தூய மாணவன் கடமை.

     (கருத்து) இங்குக் கூறியது அவரவர் கடமை.            (58)

      59. பண்பினாலே பெருமை

சேற்றிற் பிறந்திடும் கமலமலர் கடவுளது
     திருமுடியின் மேலிருக்கும்
திகழ்சிப்பி உடலில் சனித்தமுத் தரசரது
     தேகத்தின் மேலிருக்கும்

போற்றியிடு பூச்சியின் வாயின்நூல் பட்டென்று
     பூசைக்கு நேசமாகும்
புகலரிய வண்டெச்சி லானதேன் தேவர்கோன்
     புனிதவபி டேகமாகும்

சாற்றிய புலாலொடு பிறந்தகோ ரோசனை
     சவாதுபுழு கனைவர்க்கும்ஆம்
சாதியீ னத்திற் பிறக்கினும் கற்றோர்கள்
     சபையின்மேல் வட்டம் அன்றோ

மாற்றிச் சுரத்தினை விபூதியால் உடல்குளிர
     வைத்தமெய்ஞ் ஞானமுதலே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) விபூதியால் சுரத்தினை மாற்றி உடல் குளிரவைத்த
மெய்ஞ்ஞான முதலே! - திருநீற்றாலே (பாண்டியன்) வெப்பத்தைத் தணித்து
மெய்குளிரவைத்த மெய்யறிவின் முதல்வனே!, மயிலேறி....... குமரேசனே!-,
சேற்றில் பிறந்திடும் கமலமலர் கடவுளது திருமுடியின் மேல் இருக்கும் -
சேற்றிலே தோன்றிய தாமரைமலர் தெய்வத்தின் திருமுடிமேல் இருக்கும்;
திகழ்சிப்பி உடலில்