செல்வமிகு
கணவனே தெய்வமென் றனுதினம்
சிந்தைசெய் பவள்மனைவியாம்
சிநேகிதன் போலவே அன்புவைத் துண்மைமொழி
செப்புமவ னேசோதரன்
தொல்வளம்
மிகுந்தநூல் கரைதெரிந் துறுதிமொழி
சொல்லும்அவ னேகுரவன்ஆம்
சொன்னநெறி தவறாமல் வழிபாடு செய்துவரு
துய்யனே இனியசீடன்
வல்விரகம்
மிஞ்சுசுர குஞ்சரி யுடன்குறவர்
வஞ்சியை மணந்தகணவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|