வாய்மதம்
பேசிடும் அநியாய காரர்க்கு
வாய்த்தகலி காலம்ஐயா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மயிலேறி......குமரேசனே!-,
தாய் புத்தி சொன்னால் மறுத்திடும்
காலம் - அன்னை மொழியை ஏற்றுக்கொள்ளாத காலம்; உயர் தந்தையைச்
சீறுகாலம் - பெருமைமிக்க தந்தையை வெறுத்துரைக்குங் காலம்; சற்குருவை
நிந்தைசெய் காலம் - நல்லாசிரியனைப் பழிக்கின்ற காலம்; கடவுளைச் சற்றும்
எண்ணாத காலம் - கடவுளைச் சிறிதும் நினையாத காலம்; பேய் தெய்வம்
என்று உபசரித்திடும் காலம் - பேயைத் தெய்வமென்று போற்றும் காலம்;
புரட்டருக்கு ஏற்ற காலம் - ஏமாற்றுகின்றவர்க்குத் தக்க காலம்; பெண்டாட்டி
வையினும் கேட்கின்ற காலம் - மனைவி வைதாலும் பொறுத்துக்கொள்ளும்
காலம்; நல் பெரியர்சொல் கேளாத காலம் - நல்ல பெரியோர் மொழியை
ஏற்றுக்கொள்ளாத காலம்; பெரியவன் தேய்வுடன் சிறுமையுறு காலம் -
உயர்ந்தவன் கலங்கித் தாழ்வுறுங்காலம்; மிகுசிறியவன் பெருகு காலம் -
மிகச்சிறியவன் பெருமையுறுங் காலம். செருவில் விட்டு ஓடினோர் வரிசை
பெறுகாலம் - போரிலே தோற்று ஓடியவர்கள் சிறப்புப் பெறுங் காலம்; வசை
செப்புவோர்க்கு உதவுகாலம் - இழிவாகப் பேசுவோர்க்கு உதவி செய்யுங்
காலம்; ஐயா! வாய்மதம் பேசிவிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் -
ஐயனே! இறுமாப்பான மொழிகளைக்கூறும் ஒழுங்கீனர்க்குப் பொருந்திய
கலிகாலம்.
(கருத்து)
இக்காலத்திலே
ஒழுங்குதவறி நடப்பவர்கள் பலர். (57)
58.
உற்ற கடமை
கல்வியொடு
கனமுறச் சபையின்மேல் வட்டமாக்
காணவைப் போன்பிதாவாம்
கற்றுணர்ந் தேதனது புகழால் பிதாவைப்ர
காசம்செய் வோன்புத்திரன்
|
|